பக்கம்:மூட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31/மூட்டம் சுெ.சமுத்திரம் யூனிபாரக்காரர்கள், அந்த யூனிபாரங்களைப் போல் தங்களுக்கும் கஞ்சி போட்டு இஸ்த்திரி செய்யப்பட்டது போல் நிமிர்ந்திருந்தார்கள். அணி வகுப்பு தோரணை உடல் முழுவதும் தெரிந்தது. இதற்குள் பழனிவேல் நிதானமாக எழுந்தபோது மணிச்சத்தம் நின்றது. ஆனாலும் ஒரு இனிமையான சத்தம்...சிங்கி தட்டுவது மாதிரியான சத்தம். அபிராமியின் சத்தம். ஒரு நிமிடம்...அப்பா இருக்கார்,' என்ற கனிவான சத்தம். சாம்பல் நிற டிரேயில், நான்கு கண்ணாடிக் குவளைக ளோடு வந்த அபிராமியும் பழனிவேலும் வராண்டாவின் நடுப்பக்கம் 'கிராஸ் செய்தார்கள். அபிராமி கொடுத்த பழரசத்தை யூனிபாரக்காரர்கள் உற்றுப் பார்த்தார்கள். காவிக்கலர் சூஸ்...ழரீ ராமனுக்கு கண்களை மூடி நன்றி சொல்லிக் கொண்டார்கள். ஆண்டவன் அற்புதத்தை எப்படிக் காட்டுகிறான். சூஸ் மட்டுமா காவி...அந்தக் கண்ணாடிக் குவளையும் காவி நிறம். இவளுக்கு ஒரு காவிச் சேலை கட்டி விட்டால்...சர்வ பொருத்தம்... - அந்தக் கண்ணாடிக் குவளைகளை, அவர்கள் பயபக்தியோடு வாங்கிக் கொண்டபோது, உள்ளறையில் சாதாரணக் குரலில் பேசிய பழனிவேல், போகப் போக உரத்துப் பேசுவது கேட்டது. அப்புறம் அதுவே கத்தலாகி இறுதியில் கசிந்து போனது. சங்கரசுப்பு, உடம்பை நெளித்து ஒரு காதை மேல் நோக்காய்த் தூக்கி ஒட்டுக் கேட்க முயற்சித்தபோது, அபிராமி கண்ணாடிக் குவளைகளை மாறி மாறிப் பார்த்தபடியே, ஆர அமரக் குடிப்பவர்களை எரிச்சலோடு பார்த்தாள். ஒருத்தர் பாதிகிளாசைவைத்தபோது, அவர் மிச்சம் வைக்கிறார் என்று அந்தக் குவளையை அவள் எடுக்கச் சென்ற போது அந்த ஆசாமி, இரண்டு கைகளையும் வைத்து, அதைத் தூக்கி வாய்க்குக் கொண்டு போனார். அவள் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/33&oldid=882398" இலிருந்து மீள்விக்கப்பட்டது