பக்கம்:மூட்டம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شستئاyع /32 அபிராமியும் பழனிவேலும் மீண்டும் அதே அறையில் கிராஸ் ஆனார்கள். பழனிவேல் அணில்வால் மாதிரி அடர்த்தியான தன் மீசையை வடக்கயிறு மாதிரி முறுக்கிய படியே, தமது இருக்கையில் ஆங்காரமாய் உட்கார்ந்தார். சங்கரசுப்புக்கு விசயத்தை கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. பழனிவேலுவின் உதடுகள் வெடித்தன. அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்ட போது சத்தம் ஏற்பட்டது. 'பாருங்க இந்த அநியாயத்தை-உலக வங்கி திட்டத்துல... நம்ம ஆற்றுக் கால்வாயிலே கான்கிரீட் போட்டு...கரையிலும் கார் போகிற அளவுக்கு ரோடு போட விளம்பரம் கொடுத்தாங்க...நானும் டெண்டர் கொடுத்திருந்தேன்...நாலு லட்ச ரூபா டெபாசிட் வேற கட்டுனேன்...மூணுகோடி ரூபாய் திட்டம்...மெட்ராஸ்ல கோட்டை வரைக்கும் சூட்கேஸோட போயிட்டு வெறுங்கையோட வந்தேன். கடைசியில் என்னடான்னா அந்த காண்டிராக்ட, திவான் முகமதுக்கு கொடுத்தாச்சாம். இவ்வளவுக்கும் அவன் டெண்டர் கூடப் போடல, இத நான் விடப் போறதா இல்லை... இவ்வளவுக் கும் நான் கட்சிக்காரன்னுபேரு...அந்த திவான் முகமது முஸ்லீம் லீக்கு...' 'இது யாரோட வேலையா இருக்குமுன்னு நினைக்கீங்க" 'எல்லாம் நம்ம மாவட்ட மந்திரி அப்துல்லா இருக்கான் பாருங்க, அவனோட வேலை...இவ்வளவுக்கும் அவன் எலக்ஷன்ல நிக்கும்போது ஒரு லட்ச ரூபா அழுதேன். போஸ்டர் அடிச்சுக் கொடுத்தேன். அவன் தொகுதியில் அடியாட்களை அனுப்பி கள்ள ஒட்டு கூட போட வச்சேன்... இந்த திவான், ஒரு பைசா கூட கொடுக்கல. கடைசில மந்திரி அப்துல்லா அவன் சாய்பு புத்தியக் காட்டிட்டான். பாருங்க...எனக்கு வேண்டிய ஒருத்தர் போய்க் கேட்டால், 'உங்க ஆளுக்கு இருக்கிற சாராயக் கடைங்க போதாதா... சினிமா தியேட்டருங்க பத்தாதுன்னு திருப்பிக் கேட்கானாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/34&oldid=882400" இலிருந்து மீள்விக்கப்பட்டது