பக்கம்:மூட்டம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் بيثيوم / 33 அந்த நீண்ட நெடிய ஆற்றின் கிழக்குப் பகுதியில், இதே உலக வங்கித் திட்டத்தில் கால்வாய்க்கு கான்கிரீட் போட்டு, கரையை சாலையாக்க இன்னொரு பிரமுகர், εσφ கோடி ரூபாய் டெண்டரில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாய்ச் செலவழித்து, ஆறுகோடியை அமுக்கி விட்டாராம்... கான்கிரீட் கால்வாயைச் சரி பார்ப்பதற்கு முன்பே, மாமூலாக நடந்த பொறியாளர்களைக் கைக்குள் போட்டும், மனச்சாட் சிப்படி நடந்த அதிகாரிகளைப் பந்தாடியும், கான்கிரீட் போட்டதாக கணக்கு செய்யப்பட்ட கால்வாயில் அவசர, அவசரமாக தண்ணீரைத் திறந்து விடச் செய்துவிட்டாராம். இதனால் கான்கிரீட் போடக் கொட்டப்பட்ட மணல், இப்போது தண்ணீரையே அடைத்துக் கொண்டதால், அந்தக் கால்வாயை தூர் எடுக்க இன்னொரு டெண்டர் விடப் போகிறார்களாம். அதையும் அந்தப் பிரமுகரே எடுக்கப் போகிறாராம். இந்த மேற்குப் பகுதிக் கால்வாயிலும், அவரைப் போலவே நான்கில் மூன்று பங்கு பணத்தை அமுக்குவதற்கு புளு பிரிண்டே தயாரித்து வைத்திருந்த பழனிவேல், இப்போது இருக்கையில் சோர்ந்து சாய்ந்தார். அவர் கண்கள் மட்டும் தீக்கட்டிகளாய்த் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டிருந்தன. - காத்திருந்த உலக வங்கி காண்டிராக்ட்காரியை நேற்று வந்த திவான் தட்டிக் கொண்டு போயிட்டான். யாரை விட்டாலும் அவனை விடக்கூடாது. சங்கரசுப்பு, நிதானமாக எழுந்தார். பழனிவேல் இருக்கைக்குப் பின்பக்கமாய்ப் போய் அவரது முதுகைத் தட்டிக் கொடுத்தார்; தடவிக் கொடுத்தார். பிறகு மீண்டும் தமது இருக்கைக்கு வந்து, யூனிபாரக்காரர்களை ஒரே. பார்வையில் வட்டமிட்டு விட்டு, விரக்தியான குரலில் பேசினார். 'இதுக்குப் பெயர்தான் 'இஸ்லாம் என்கிறது. நம்ம இந்துக்களுக்கு இருக்கிற பெருந்தன்மை அவங்களுக்குக் so.2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/35&oldid=882402" இலிருந்து மீள்விக்கப்பட்டது