பக்கம்:மூட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فـشيوع / 35 பெரிய காரியமா என்ன.. பழனிவேல் ரசித்துக் கேட்டார். அமைச்சர் அப்துல்லா அப்போதே ராஜினாமா செய்து விட்டது. போலவும், இவருக்கே அந்த காண்டிராக்ட் கிடைத்து விட்டது போலவும், ஒரு சுகமான ஆனந்தக் களிப்பு. அதே சமயம் முருகன் கோவிலுக்கு முன்னாலேயே உருவான மசூதியை இடிப்பதா என்ற மனச்சாட்சியின் சின்னக் குத்தல்..அபிராமி சிறுமியாய் இருக்கும்போது, அவளுக்கு ஆஸ்த்துமா மாதிரியான ஈளை மூச்சு.அந்த மசூதிக்குப் போய்த்தான் சுகமாச்சு... பழனிவேல், எந்த மசூதியை இடித்தாலும், அந்த மசூதியை இடிக்கக் கூடாது என்று கண்டிப்பாக பேசப் போனார். அப்போது ஒரு தபால் இளைஞன் உள்ளே வந்தான். மணியார்டர் பாரத்தையும், ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளையும் அவரிடம் நீட்டினான். அதன் அடிவாரத்தில் எழுதப்பட்ட தகவலைப் படித்ததும் பழனிவேல், அந்த பாரத்தையும், ரூபாய் நோட்டையும் அவனிடமே சுருட்டிக் கொடுத்தார். பிறகு கத்தினார். 'அந்த பயல் பணம் அனுப்பினால் நீயும் கொண்டு வந்திடனுமா? வாங்க மறுத்துட்டேன்னு, அவன் மூஞ்சியி லேயே எறி. ஏன் அப்படி பேமுழி முழிக்க...உனக்கும் அழுவுறேன்...இந்தாம்மா தனம், ரெண்டு ரூபா கொண்டு GIIT, " இந்த மாதிரியான சமயங்களில் மட்டுமே, கணவனிடம் 'அம்மா மரியாதை வாங்கும் தனம்மாள், அந்த மரியாதை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லையானால், அவ மரியாதையாகி விடும் என்பதை உணர்ந்தவள் போல், அவசர அவசரமாக இரண்டு ரூபாயைக் கொண்டுவந்து தபால் காரனின் கையில் வைத்தாள். பழனிவேலுக்கு பற்றி எறிந்தது. எப்படி அவன் கையை இவள் தொடலாம்...என் கையில் கொடுத்தா கொடுக்க மாட்டேனா...திருட்டு முண்ட...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/37&oldid=882406" இலிருந்து மீள்விக்கப்பட்டது