பக்கம்:மூட்டம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فسبت مع / 38 பையோடு அபிராமி வந்தாள். அவர்கள் கால்களை வளைத்துக் கொள்வதற்காக கண்களால் வளைத்துப் பார்த்தாள். தந்தையைப் போல் வைரப்பட்ட உடம்பு, வைராக்கியமான பார்வை. யோசித்துவிட்டுப் பேசாமலும், யோசிக்காமல் பேசாமலும், யோசித்துக் கொண்டே பேசுவது போன்ற லாவகம். மகளை பழனிவேலு வியந்து பார்த்துக் கொண்டே மற்றவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். 'இவள் எப்படிப் பிறந்தாள்னு ஒங்களுக்குத் தெரியாது?" சமையலறைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தனம்மாள் திடுக்கிட்டாள். என்னத்த உளறப் போகிறாரோ என்று பதை பதைத்து, மகளிடம் பேசப் போகிற சாக்கில், அங்கே போய்க் கொண்டிருந்தாள். உடனே பழனிவேல் அவளுக்குப் பார்வையாலேயே கோஷாப் போட்டார். 'தேவடியா முண்டை, இங்கென்னடி வேலை என்று உதடுகளை ஒலி எழுப்பாமல் அபிநயம் செய்து காட்டினார். அந்த அம்மா பயந்து போய் உள்ளே ஒடியபோது, பழனிவேல் மானிட அபிராமி பிறந்த வரலாற்றை விளக்கினார். 'எனக்கு கல்யாணமாகி பத்து வருடமாய்க் குழந்தை இல்லை."எங்க மாமியார் கூட கொழுந்தியாளைக் கட்டிக்கச் சொன்னாங்க. நாம என்ன முஸ்லீமா...மூணு பொண்டாட்டி கட்டிக்கிறதுக்கும், தலாக் செய்யுறதுக்கும்...ஆண்டவன் விட்ட வழியின்னு இருந்தேன்.ஆனாலும் மனசு கேட்கல...ஒரு பெரியவர் சொன்னபடி 'அபிராமி கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி போய் அபிராமி அந்தாதியைப் படிச்சேன்..சரியா பத்தாவது மாதம் இவள் பிறந்தாள். இவள் என்னை தந்தையாய்ப் பார்த்தாலும், நான் இவளை அம்மாவாத்தான் பாக்கேன்." பழனிவேலால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. குரல் தழு தழுத்தது. தவம் செய்து பெற்ற தன்மகள், கல்லூரியில் திவான் முகமது மகனோடு, 'இஸ்க்கு, தொஸ்க்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/40&oldid=882413" இலிருந்து மீள்விக்கப்பட்டது