பக்கம்:மூட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شب ٹہyع / 39 நடப்பதாய் ஒரு மொட்டை கடுதாசி வந்ததிலிருந்து, அவர் மனமும் மூளியாய்ப் போனது. சாடை மாடையாய்ப் பார்த்ததில், அது உண்மை போலவும் தோன்றியது. சங்கரசுப்பு, ஒரு போடு போட்டார். 'பாப்பா, பாக்கிறதுக்கு அசல் அபிராமி மாதிரிதான் இருக்காள். அபிராமிக்கும் பெருமை பிடிபடவில்லை. தெய்வ அபிராமியின் ஒரு கூறு, தான் என்பதில் ஒரு பெருமிதம். தலைக்குமேல் ஒரு மஞ்சள் ஒளி வட்டம் இருப்பது போன்ற அனுமானம். மற்ற பெண்களைப் போல் அல்லாமல், தான் ஒரு தெய்வப் பிறவி என்ற நம்பிக்கை... அபிராமி புறப்பட்டாள். அவள் காலடிச்சத்தம் ஒய்ந்ததும், பழனிவேல் சங்கரசுப்புவின் காதுகளில் கிசு கிசுத்தார். அப்புறம் அவன்..நயினார் முகமதுவின் மகன் சம்சுதீன்னு ஒரு வாத்திப் பயல் இருக்கான். காலேஜ்ல வேல பாக்குற நம்ப இந்துப் பெண்கள் கிட்ட ஏடாகோடமாய் நடக்கானாம். அவனை ஏதாவது செய்வதாய் இருந்தால் இப்பதான் செய்யனும்.' சங்கரசுப்பு பதிலுக்குக் கிசுகிசுத்தார். 'முடிச்சுடுவோம், உங்க குடும்ப கெளரவம் தானே எங்க கெளரவம்? அப்ப வரட்டுமா..சம்சுதீனை நாங்க கவனிக்கோம். எதுக்கும் அபிராமிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாய் சீக்கிரம் பாருங்க.." பழனிவேல், வாசலைத் தாண்டியவர்களை வழியனுப்பக் கூடத் தெரியாமல் மரத்து விட்டார். கடைசியில அபிராமி சங்கதி இவனுகளுக்கெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் எனக்குத் தெரிஞ்சிருக்கு.. இந்த பாபர் மசூதியை இடிச்சது சரிதான். அபிராமி என்னத் தலைகுனிய வச்சிடுவாளோ..எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/41&oldid=882415" இலிருந்து மீள்விக்கப்பட்டது