பக்கம்:மூட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40/ ہy:ضبدثہ சுெ.சமுத்திரம் வைப்பாள்..சம்சுதீனின் தலை அவன் கழுத்துல இருந்தாத் தானே.. பழனிவேல் கோபமாகக் குமுறி, அதற்கு வடிகால் தேடுவது போல் சமையலறையைப் பார்த்து சத்தம் போட்டபடியே ஓடினார். ‘ஏண்டி திருட்டு முண்ட மகள வளக்கிற லட்சணமாடி... 3. சம்சுதீன், பாபர் மசூதியின் இடிபாடுகள் போலவே முடங்கிக் கிடந்தான். சாதாரணமாக, கழுத்தை நேர்க்கோடாக்கி, தலையை நிமிர்த்தி உட்கார்ந்து இருப்பவன், குடைசாய்ந்து கிடந்தான். நாற்காலியின் முதுகு விளிம்பில் தலையைச் சாய்த்து, கால்களை அகல விரித்துப் போட்டு, உடம்மீை நெளிவு சுளிவுகளாக்கிக் கிடந்தான். மேலே மாரடித்து ஒப்பாரி போடுவதுபோல் சத்தமிட்டுச் சுற்றிய துருப்பிடித்த மின் விசிறியைக் கண்களைச் சுழற்றாமலே பார்த்தான். பாபர் மசூதி இடிபட்டதைவிட, கல்லூரி சகாக்கள் நடந்து கொண்ட விதம் அவனை உலுக்கிப் போட்டுவிட்டது. ஆண்டாண்டு காலமாக அந்யோன்யமாய்ப் பழகியவர்கள் கூட, இப்போது தன்னை அந்நியமாய்ப் பார்ப்பது போல் அவனுக்கு ஒர் அனுமானம். ஒரு வேளை அவர்கள் நினைப்பது போல்-சொல்லாமல் சொல்லிக் காட்டுவது போல், தான் இந்தியன் இல்லையோ என்ற சந்தேகம். இந்தியனாக அங்கீகரிக்கவில்லையோ என்ற ஆதங்கம். பொன்விழாக் காலத்தைக் கொண்டாடும் கட்டத்திற்கு வந்து விட்ட கல்லூரி என்பதனாலோ என்னவோ, அந்த ஆசிரிய அறை ஈயமாய் இளித்தது. பித்தளையாய் வெளுத்துக் கிடந்தது. அதன்சுவர்களில் சுண்ணாம்புத் தோல் பிய்ந்துமண் சதைகள் வெளிப்பட்டன. அந்த செவ்வக அறையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/42&oldid=882420" இலிருந்து மீள்விக்கப்பட்டது