பக்கம்:மூட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் قام شعرع / 41 மரக்கோடு கிழித்ததுபோல் இருபக்கமும் பத்தாம்பசலி மேஜைகள், எதிர்ப்பக்கம் தாவர இயல் ஆசிரியர்களுக்கான கையொடிந்த இருக்கைகள். இவன் உட்கார்ந்திருக்கும் பக்கம் விலங்கியல் ஆசிரியர்களுக்கான இருக்கைகள். சுவர் மூலை யில் ஒரு தூசி துப்பட்டை ரேக்கு; அவற்றில் பாழடைந்த புத்தகங்கள். சம்சுதீன், கல்லூரிக்கு முன்பாகவே வந்துவிட்டான். அபிராமி அவனுக்காக பஸ் நிலையத்தில் ஒப்புக்கு நிற்பது போல் காத்து நிற்பாள் என்ற உணர்வில்லாமலே வந்து விட்டான். மசூதி பாளையத்தில் இன்னும் கூச்சலும் குழப்பமும் கோபாதாபங்களும் அடங்கவில்லை. போதாக் குறைக்கு டவுன் பக்கம் கோப்ாதாபத்தோடு போனவர்களில், பலர் தாக்கப்பட்டு ஆங்காங்கே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கேள்வி. இவற்றையெல்லாம் உள்வாங்க முடியாமல் முன் கூட்டியே வந்தவன், அதற்கு முன்பாகவேரகுராமன் இருப்பதைப் பார்த்தான். அன்றாடப் பத்திரிகை செய்திகளை அவன் படிக்கத் தேவையில்லை என்பதுபோல், அலசுகிறவர் இந்த ரகுராமன். அந்த ஆசிரியக் கூட்டத்திலே இவன் ஒருவன்தான் அவருக்குக் காது கொடுப்பான். ஆனால் இன்றோ அவனுக்கு வாய்கொடுக்க மறுத்தவர்போல் சும்மா இருந்தார். இவ்வளவுக்கும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை. பாபர் மசூதி இடிபட்ட மறுநாள் காலை இதுதான். டில்லி, அகமதாபாத், சூரத், பம்பாய் போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நெருப்பில் வெந்தும், துப்பாக்கிக் குண்டுகளால் துளைபட்டும் சின்னாபின்னமான செய்திகள் நிறையவே உள்ளன. சர்வதேச அரசியலில் இருந்து, அந்தக் கல்லூரி நிர்வாகம் சொந்தக்கார ஜூனியர் ஒருவரைப் புதிய முதல்வராய் நியமித்த உள்ளூர் செய்தி உட்பட அனைத்தையும் அலசும் அறிவுஜீவி ரகுராமன். போஸ்னியாவில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவது பற்றியும், பாலஸ் தீனத்தில்அரபு மக்கள் நாடேர்டிகளாகத்திரியும் நிலையையும் சுட்டிக் காட்டும், இதோ இந்த ரகுராமன், இன்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/43&oldid=882422" இலிருந்து மீள்விக்கப்பட்டது