பக்கம்:மூட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42/மூட்டச் சுெ.சமுத்திரம் நாடெங்கிலும் சொந்த சோதரர்கள், சோதரிகள் துடிதுடிக்கக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி அவனிடம் பேச முயற்சி கூடச் செய்யாதது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவன் போட்ட குட்மார்னிங்கைக் கூட மோர்னிங்காக எடுத்தவர்போல் அசைவற்று இருந்தார். இதற்குள் அங்கே வந்த பெரும்பாலான ஆசிரியர்கள் சம்சுதீன் அங்கே இருக்கக்கூடாது என்பதுபோல், திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, இருக்கிறானே என்பது போல் மற்றவர்களிடம் கிசுகிசு என்று பேசுகிறார்கள். ஒவ்வொரு முகத்திலும் கிருஷ்ணஜெயந்தியோ அல்லது ராமநவமியோ வந்தது போன்ற பக்திப் பரவசம்-ஏதோ ஒரு பூரிப்பு ஆனாலும் அவர்களைச் சும்மா சொல்லக்கூடாது! இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் அவன் அங்கே இருப்பதை சகித்துக் கொண்டார்கள். அதே சமயம், அவன் அங்கு இருப்பதால் மசூதி இடிக்கப்பட்ட மகிழ்ச்சியை, இந்துக்கள் நடத்திய வீர சாகசங்களை பேசமுடியவில்லையே என்ற ஆதங்கம், அவர்கள் பார்வையி லிருப்பதுபோல் சம்சுதீனுக்குப்பட்டது. சிலர் அவனைக் காட்டிக் குறுஞ்சிப்பாய்ச் சிரிப்பது போலவும் தோன்றியது. சம்சுதீன் அவசர அவசரமாய் வெளியேறினான். திரும்பிப்பாராமலேயே, ஆசிரிய அறைகளும், சோதனைக் கூடங்களும் கொண்ட அந்தத் தாழ்வாரம் வழியாய் நடந்து, அதன் முனையிலிருந்து கீழே குதித்துத் தாமரைப்பூ வடிவில் உருவான சிமிண்ட் வேலைப்பாட்டையும், அதற்கு மேல் இருந்த கொடிக்கம்பத்தையும் பார்த்தான். அமாவாசை, பெளர்ணமி, கிறிஸ்துமஸ் போல் சுதந்திர நாள், விடுதலை நாள், தியாகிகள் தினம் போன்ற நாட்களில் மட்டும் தேசக் கொடியை உச்சியில் பூச்சூடலாய்க் கொண்டிருக்கும் அந்தக் கம்பம், இப்போது வெறும் மொட்டையாகத் தெரிந்தது. ஆங்காங்கே அவனுக்கு உயிர்ப்புள்ளதாய்த் தெரிந்த கட்டிடங்கள், இப்போது மயான அமைதியோடு கூடிய சமாதிகளாகத் தோன்றின. 'குட்மார்னிங் சார் என்ற குரல் கேட்டுத் தலைதிருப்பினான். குங்குமம் வைத்த இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/44&oldid=882424" இலிருந்து மீள்விக்கப்பட்டது