பக்கம்:மூட்டம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் گا۔ تاہم/44 பயந்து விட்டார்கள். அதற்குமுன்பே ஒரு புதுக்காங்கிரஸ்காரர் சுதந்திாம் வரட்டும் எங்களுக்கு அப்போ தெரியும் சேதி: என்று மிரட்டினாராம். இத்தகைய பயத்தாலோ அல்லது குற்ற உணர்வாலோ அவர்கள் குடும்பத்தோடு பாகிஸ்தான் புறப்பட்டபோது, தாத்தாவையும் கூப்பிட்டார்களாம். இவரோ அவர்களைத் தடுக்கப் பார்தாராம். அவர்கள் மசியாத போது இந்துத் தோழர்களை அனுப்பி, 'அந்தக் காங்கிரஸ் காரன் மிரட்டினான்னு பயப்படா தீங்க; அவன் இவ்வளவு நாளும் வெள்ளைக்காரனுக்கு வால் பிடிச்சுட்டு, சுதந்திரம் வருமுன்னு தெரிஞ்சு காங்கிரசுக்கு வந்த வியாபாரி. நீங்களோ, தப்போ சரியோ கொண்ட கொள்கையிலே நேர்மையாய் இருந்தவங்க. நீங்க போகக்கூடாது' என்று சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அண்ணன்கள் பிடிவாதமாய் இருந்திருக்கிறார்கள். என்றாலும், போகும் போது கண்ணிர் மல்கப் பிற்ந்த மண்ணை முத்தமிட்டுப் போனார்களாம். ஒருபிடி மண்ணை எடுத்து காகிதத்தில் மடித்துப் பையில் வைத்துக் கொண்டார்களாம். அப்படிப் போகும்போது, தமையன்மாரின் பெண் குழந்தைகள் சித்தப்பாவின் காலைக்கட்டி அழுது- உன்னைவிட்டுப் போகமாட்டோம் என்று அரற்றினவாம். ஆண் குழந்தைகள், அவரை 'வா...வா. என்று கைகளைப் பிடித்து இழுத்தனவாம். அண்ணன்மார் ஜாக்கிரதை யாய் இருந்துக்கோடா' என்று அழதழுது சொன்னார்களாம். தாத்தாவால் தாளமுடிய வில்லையாம். அவர்களை விட்டு எதிர்த்திசையில் ஓடினா ராம். வீட்டிற்கு போய் அங்குமிங்குமாய் புரண்டு புரண்டு அழுதாராம். தாத்தா சாவதுவரைக்கும், தமையன்மாரோடு வாழ்ந்த, மசூதிக்குத் தெற்கே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். அப்போது தாத்தா சொன்னதை கதை மாதிரி எடுத்துக் கொண்ட சிறுவன் சம்சுதீன், இப்போது கண்களைத் துடைத்துக் கொண்டான். தாத்தாவைக், கூட திட்டிக் கொண்டான். மதியாத மண்ணில் எதற்காக இருக்கணும்? இந்நேரம் தாத்தாக்கள் கதை முடிந்திருக்கும். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/46&oldid=882428" இலிருந்து மீள்விக்கப்பட்டது