பக்கம்:மூட்டம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46? نتائٹ،وغ கெ.சமுத்திரம் சுட்டிக் காட்டியதுபோல் சம்சுதீனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் வீட்டுக்குள் கோஷாபோட்டு இருக்க முடியாது. மூலையில் முடங்கினாலும் முடங்குவாளே தவிர, முக்காடு போட முடியாது. பெயரில்கூட எவள் மூலம் பிறந்தாளோ அந்த அபிராமியின் பெயரில்தான் உயிருள்ளவரை நடமாடுவாளே தவிர... ஒரு சாந்த் பீவியாக...அல்லது நூர்ஜஹானாக இருக்க முடியாது. இருவரும், ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. அவள் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லவில்லையே என்று சம்சுதீன் குலைந்துபோய் உட்கார்ந்தான். அவளுக்கோ, அவன் நேற்று சந்திக்க வராததும், அன்னை அபிராமியின் சித்துவிளையாட்டே என்ற ஒரு நம்பிக்கை. வேறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். முகத்தை மட்டுந்தான். மனதை அப்படித் திருப்ப முடியவில்லை. ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்கள். நெஞ்சில் ஒளியாய் நின்றவை இப்போது நெருப்பாய்ச் சுட்டன. அவற்றை நினைக்க நினைக்க அவளுக்கு மனம் கேட்கவில்லை. அவன் நிலைகுலைந்து கிடந்தவிதம் வேறு, அவள் தாய்மையைத் துண்டிவிட்டது. எதிர்த்திசையில் இருந்து எழுந்து, அவன் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்தக் கணத்தில், தெய்வ அபிராமியை மனதிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு, தன்னை ஒரு சாதாரண அபிராமியாக்கி அவனிடம் கேட்டாள் 'நேற்று ஏன் நீங்க வரலே ஒங்க மனசிலே என்னதான் நினைப்பு? ஏன் வரலேன்னாவது இப்ப சொல்லலாமில்லே?" சம்சுதீன், அவளை வாயகலப் பார்க்காமல் பல்கடித்துப் பார்த்தான். பாபர் மசூதி இடிபட்டு உலகமே அதைப் பற்றி விமர்சிக்குது. முஸ்லீம் சுமுதாயமே தவியாய்த் தவிக்குது. - இவளுக்கு இந்த சமயத்திலேதான் நான் காதலனாய் இருக்கனுமோ? கொஞ்சங்கூட 'டீசன்ஸி தெரியாதவள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/48&oldid=882432" இலிருந்து மீள்விக்கப்பட்டது