பக்கம்:மூட்டம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. சு.சமுத்திரத்தின் படைப்புகளுக்கு முன்னுரை-அணிந்துரை எல்லாம் தேவையில்லை. அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் ஏற்கனவே உள்ளது. அந்த எளிமையான நடை, அதற்குள் உள்ளாடிக்கிடக்கும் ஒருவகை சமூக நையாண்டி அவரின் படைப்புகளுக்கு தனிக் கவர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. த.மு.வ.ச. மீதுள்ள மதிப்பின் காரணமாகவே இந்த அணிந்துரையைக் கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன். - 'செம்மலர் ஏட்டில் தொடராக வெளிவந்த இந்த நவீனத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாபர் மசூதியை இடித்து இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றினார்களே, அந்தக் கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் தமிழ் நவீனம் இதுவாகத்தான் இருக்கும். தன் காலத்தில், தன் கண் முன்னால் நடக்கிற அவலங்களை, அநீதிகளைக் கருப்பொருள் ஆக்குவதுதான் ஒரு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியின் கடமையாக இருக்கும். பாரதியின் கவிதைகளில் மட்டுமல்ல, அவரின் கதைகளிலும் கூட அந்தக்காலத்தின் ஆகப்பெரும்பிரச்சினையான அடிமை விலங்கு அடிச்சரடாய் வந்துள்ளது.இன்று நம் கண்முன்னால் ஒரு மாபெரும் அக்கிரமம் நடந்துள்ளது. 450 ஆண்டுக ளுக்கும் மேலாக இருந்த ஒருசின்னம்-இந்தியப்பழமையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/5&oldid=882436" இலிருந்து மீள்விக்கப்பட்டது