பக்கம்:மூட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் قوساشyع / 48 அந்த ஆசிரிய அறைக்குள், ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். வெள்ளை சபாரிபோட்ட ராமானந்தம்; விபூதி குங்கும டாக்டர் முரளி, அந்தக் குங்குமத்தை முறைத்தபடியே பார்க்கும் பகலவன் என்கிற இசக்கி; எலிவால் சடைபின்னிய வாளிப்பான முத்துலட்சுமி, காட்டாமோட்டாசேலைகட்டிய வயதான எலிசபெத், உதவிப் பேராசிரியனும் மசூதிபாளையத்தைச் சேர்ந்தவனுமான முத்துக்குமார் இவர்கள் தனித்துவங்கள் அப்படி இல்லாத இன்னும் சிலர் மற்றும் பலர். எல்லோருமே, அப்படிக் கிடந்த சம்சுதீனைப் பார்த்தார்கள். அதற்கான காரணத்தைக் கேட்பதுபோல் அபிராமியைப் பார்த்தார்கள். அவள் இப்போது முகத்தை 'பெரிய எழுத்து அபிராமி அந்தாதி புத்தகத்தால் மறைத்துக்கொண்டாள். ராமானந்தம், சக ஆசிரியர்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு, அபிராமியையும் நோட்ட மிட்டபடியே கேட்டார்; ந்ாற்பது வயதுக்காரர். சம்சுதீனிடம் ஏதோ கடன் கொடுக்கல் வாங்கலில் 'சில்லறைச்' சச்சரவுகளை வைத்திருப்பவர். ஆகையாலோ என்னவோ இப்போது அடாவடியாகவும் ஆனந்தமாகவும் கேட்டார். 'என்னப்பா சம்சு! ஏன் இப்படி இடிஞ்சு போய்க் கிடக்கிறே? சம்சுதீன், ஆவேசமாகத் தலையைத் துக்கினான். முஸ்லீம்களின் பாதுகாப்பு உணர்விற்கே கேடயமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் குத்திக் காட்டுறான். கிண்டல் பண்ணுறான். இவனை விடப்படாது... 'நான் எப்படிக் கிடந்தால், உங்களுக்கு என்ன சார்? வேணுமின்னா எங்க மசூதியை இடித்ததுமாதிரி என்னையும் இடிச்சுப் போட்டிருங்க. ஆப்டர் ஆல் நான் ஒரு முஸ்லீம். சிறுபான்மைக்காரன், இந்த மண்ணில் பிறந்த அந்நியன்." ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் குழம்பிப் போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/50&oldid=882438" இலிருந்து மீள்விக்கப்பட்டது