பக்கம்:மூட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسمتیوع / 50 'மசூதியை இடிச்சது தப்பு தான். அதுக்காக நாம ஒப்பாரி போடனும்னு யாரும் எதிர்பார்க்கப்படாது. பெரியார் கூட பிள்ளையார்சிலையை உடைச்சார். எம்.ஆர்.ராதா, ராமனைக் கேவலப்படுத்தினார். நாம் பொறுத்துக்கலையா?" என்றாள் அபிராமி. சம்சுதீன் மீண்டும் தலையைத் தூக்கினான். அவளை உரிமையோடு கடிந்து கொள்வதாகத்தான் நினைத்தான். பழகிய தோஷத்தில் இந்த சகாக்களின் முன்னாலேயே முன்பு அவளை, எந்த வார்த்தையால் கண்டிப்பானோ அதே வார்த்தையை இப்போதும் சொன்னான்: 'அபிராமி பிளீஸ் வுட் அப்!” அபிராமிக்கு லேசான தெளிவு. மகிழ்ச்சி கூட. எப்படியோ அவன் பேசி விட்டான் என்கிற சந்தோஷம். ஆனால் டாக்டர் முரளி விடுவதாக இல்லை. நாற்பது வயதானலும், அவருக்கு அவள் மேல் ஒரு கண். - - 'ஏய்...சம்சுதீன் உன் மனசுல என்னப்பா நினைப்பு? ஒரு இந்துப் பொண்ணுன்னா, அவ்வளவு இளக்காரமா? அபிராமி சுயமரியாதையும் சுய கருத்தும் கொண்டவள். அவள் என்ன கோஷா போட்டவளா? வாயை மூடிக்கிட்டிருக்க அவளை ஏன்யா ஷட் அப்” என்கிற?" சம்சுதீன், திணறிப் போனான். அபிராமியை தனக்காகப் பரிந்துரைக்கும்படி கண்களால் கெஞ்சினான். இதற்குள் ஒரே கத்தல், கூச்சல்; இதனால் வெளியேயிருந்தும் ஆசிரிய, மாணவப் படையெடுப்புக்கள். அபிராமிக்குத் தான் இப்போது ஒரு இந்துப் பெண் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. டாக்டர் முரளி கேட்டது நியாயமாய்ப்பட்டது. ஏதோ காதலிச்சா, அதனாலேயே அடிமைன்னு பட்டாகொடுத்ததா ஆயிடுமா? அபிராமித்தாயே, என் கண்ணைத் திறந்திட்டடி அம்மா! சம்சுதீன் சமாச்சாரமாய் ஒரு முடிவெடுக்க, இன்ணைக்கு உள்னைக் கும்பிட்டது வீண்போகல. தாயே... இப்போ ...எப்படிம்மா... நான் நடந்துக்கனும் சர்வேஸ்வரி..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/52&oldid=882442" இலிருந்து மீள்விக்கப்பட்டது