பக்கம்:மூட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் فدسينبوع / 52 . உடனே, அவன் கால்களைத் தரையில் தேய்த்தபடியே, பின்பக்கமாகத் தன்னையும், ' சைக்கிளையும் கொண்டுவந்தான். உள்ளே நின்ற அவளைப் பார்த்தான். திண்ணையில் கிடந்த சின்னக்குழந்தை படுக்கும் படியான குறுங்கட்டில் இருக்கையில் உட்காராமல், அந்தத் திண்ணை விளிம்பிற்குக் கீழே கால்களை மறைத்து, மார்பகத்திற்கு மரவாடை போட்டதுபோல் மறைத்து உள்நோக்கி நீண்ட ஒரு பலாப்பலகை மறைக்க நின்ற பாத்திமாவைப் பார்த்தான். மாம்பழத்திற்குப் பப்பாளி விதைகளையே கண்களாக்கியது போன்ற தோற்றம். எந்தச் சதையும் எக்ஸ்ட்ராவாக இல்லாத நேர்த்தி. குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகள் போட்ட சாதா சேலை. கட்டம் போட்ட ஜாக்கெட். கீழே விழப்போகிறேன் என்பதுபோல் தல்ையிலிருந்து நழுவிக் கொண்டிருந்த கோஷா. அவன், அவளை ஏறிட்டுப் பார்த்தான். எத்தனை நாளைக்குத் தான் இந்த மூப்பனார் பட்டம், கேட்டாக வேண்டும் இப்பவே. 'இந்தாம்மா உன்னைத்தான் என் பேர் மூப்பனார் இல்ல! மாரியப்பன். பாத்திமா அவனை ஒரம் சாய்த்துப் பார்த்தாள். ஒப்புக்குப் போடுவது போல், தோளில் தொங்கிய சேலை நுனியை தலையில் போட்டுக் கொண்டாள். வேலை செய்யும்போது, பேசவிரும்பாதவள் போல், வலது பக்கம் கும்பலாய்க் கிடந்த சோடாப்பாட்டில்களை எடுத்து அவற்றிற்குரிய மரப்பெட்டிப் பொந்துகளில் திணித்தாள். இடதுபக்கம் உள்ள வேர்க்கடலை மிட்டாய் ஜாடியையும், வலது பக்கம் சாக்லேட் ஜாடியையும் இரு கைகளாலும் ஒரே சமயத்தில் நகர்த்தி வைத்தாள். வெற்றிலை அடுக்குகளை எடுத்துப் பின்பக்கம் கூடை மூடியில் வைத்தாள். இதற்குள், அவன் போகப்போவது போல், அவன் நிழல் மேலே எம்புவதைப் பார்த்துவிட்டு, அவள் நிமிர்ந்தாள். உடம்பில் படிந்த தூசி துப்பட்டைகளைத் தட்டி விட்டபடியே கேட்டாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/54&oldid=882445" இலிருந்து மீள்விக்கப்பட்டது