பக்கம்:மூட்டம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شسهشيوع / 53 ‘என்ன சொன்னிக?" 'நான் மூப்பனாரு இல்லன்னேன்" பிறகு எப்படி வெத்திலை வியாபாரம் பாக்கே?" 'வெத்திலைன்னா மூப்பனாரு பலசரக்கு கடைன்னா நாடாரு...பேன்சி ஸ்டோருனா சாய்பு: வட்டிக் கடைன்னா மார்வாடி! இப்படியா நினைக்கிறது?" - 'அப்போ நீங்க என்ன சாதி?" 'மனுஷன். ஆண் சாதி' பாத்திமா, தன்னையும், அவனையும் ரசனையோடு பார்த்தபடி வந்த, ஒரு பிஞ்சில் பழுத்த சிறுமிக்கு, காசை வாங்கிக் கொண்டு சாக்லேட்டைத்திணித்து விட்டு, அவனைப் பார்க்காமல் அந்தத் தெருவைப் பார்த்தாள். அந்தத் தெரு முழுவதும் வண்ணப் பாலம் போட்டது போல் நீண்ட நூல் இழைகளைக் கொண்ட தறிகள். அவற்றிலும் ஆங் காங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவள் அவனையும் புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்தாள். இறுகலான உடம்பு, சுருள் கம்பி மாதிரியான கழுத்துகனிவான முகம். முறம் மாதிரியான முதுகு அந்த சைக்கிள் மணி போல் பிசிறு தட்டாத டாண்டாண் சத்தம். சின்னக் கரை போட்ட வேட்டி. அவள், எதிர்த் திசையில் தோன்றிய சில முகச் சுளிப்புகளைப் பார்த்துவிட்டு, கோஷாவை அகலப்படுத்தினாள். அவன் கோபப் பட்டானா அல்லது சாதாரணமாகக் கேட்டானா என்ற புதிரை அவிழ்க்கப் போகிறவள் போல் கேட்டாள். 'தப்பாக் கேட்டுட்டேனோ?" 'அப்படி நினைச்சா நான் திரும்பி வருவேனா? கோபப்பட்டிருந்தால், ஒரு மொறப்பு மொறச்சுட்டு திரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/55&oldid=882447" இலிருந்து மீள்விக்கப்பட்டது