பக்கம்:மூட்டம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56/ فسه شعاع சுெ.சமுத்திரம் துரைச்சாமி முதலாளி. ஏழெட்டு வருசமாஅவரு, மசூதி பாளைய வாரச் சந்தையில் வாங்கிப் போடுற மாடுகளை, இவரு தான் புயியரை, புனலுரு, குன்னிக் கோடு மாதிரியான மலையாளம் மாட்டுச் சந்தைக்கு பத்திட்டுப் போறது உனக்குத் தெரியும். இப்படி மாடு பத்தற மத்தவங்க... புண்ணாக்குலேயும் புல்லுக்கட்டிலேயும் கமிஷன் வைப்பாங் களாம். சாராயத்திற்கு பணம் பத்தாம ஒரு மாட்டைக் கூட வித்திட்டு அது தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி விடுவாங் களாம். இவளோட வாப்பாவுக்கு இப்படிச் செய்யத் தெரியாதே. அதனாலேயே துரைச்சாமி முதலாளிக்கு அவருமேல ஒரு மட்டுமரியாதி. இப்ப அவருக்குப் பிள்ளைகள் தலையெடுத்திட்டதனால அவங்க இவரு அலையக்கூடாதுன்னு சொல்றாங்க. அதனாலே அந்த முதலாளி இவருக்கிட்ட ஒரு இருபதாயிரம் ரூபாயாக் கொடுத்து மாட்டு வியாபாரம் பாக்கச் சொல்லப் போறாராம். லாபத்திலே பாதிக்குப் பாதியாம். அவரு என்னடான்னா ஒன்னையும்.கூட்டுச் சேர்க்கப் போறாராம்..." அய்யய்யோ ...நான் அன்னாடம் காய்ச்சி.ஏங்கிட்டே ஏது பணம்?" - 'உங்கிட்டே எவன் பணம் கேட்டான்?" அந்த மூன்று பேருமே அமீரைத் திரும்பிப் பார்த்தார்கள். மோவாய்க்குக் கீழே யாரோ உலர்த்திப் போட்டது மாதிரி இரும்பு இழைகள் மாதிரியான 'குறுந்தாடி. அதோடு அடையாளம் தெரியாமல் சங்கமமாகும் மீசை. அளவான உடம்பு. உழக்குச் சட்டை. நல்ல உயரம். முகம் கரடு முரடாயிருந்தாலும், அவர் கண்கள் ஒளி வீசின. உள்வளைந்த பற்கள். நிதானமாகப் பேசினார். 'உன்கிட்ட எவன் பணம் கேட்டான். மாடு வாங்கி விடுறது என் பொறுப்பு. அதைச் சந்தைக்குக் கொண்டு போறது உன் பொறுப்பு. லாபத்தில் பாதியில் இரண்டு பேருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/58&oldid=882453" இலிருந்து மீள்விக்கப்பட்டது