பக்கம்:மூட்டம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فههایع / 57 பாதிப்பாதி, ஏதோ நான் உனக்கு தர்மம் செய்யிறதாய் நினைக்காத. என்னாலையும் இப்போ மாடு பின்னாலே அலைய முடியல. வேறு ஆளைப் போட்டால் பத்திட்டுப் போற மாட்டை மட்டுமல்ல, என்னையும் வித்துப்புடுவான். ஒன்னைப் பங்காளியாச் சேர்க்கறதிலே எனக்கு நஷ்ட்முமில்லை. ஏன்னா உனக்கு லாபமா வர்றபணமும், மாடுபத்தறதுக்குக் கூலியாகக் கொடுக்கிற பணமும் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்கும். ஆனாலும் உன்னைப் பங்காளியாச் சேர்க்கிறதனாலே எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்காத குறையைப் போக்கிவிட்டது மாதிரி இருக்குது. அமீரின் குரல் தழுதழுத்தது. அவர் அதற்கு மேல் பேசினால் அழுதுவிடுவார் என்பதைப் புரிந்து கொண்டது போல், பாத்திமா பேச்சை மாற்றினாள். - யோவ் மூப்பனார்: தப்புத்தான். வெற்றிலைக்காரரே! உம்ம வெத்திலைய நாங்க வாங்குறது மாதிரி எங்க கடையிலே பதிலுக்கு ஏதாவது வாங்கப்படாதா? என்னைக்காவது ஒரு கலரு சோடான்னு குடிக்கீரா சரியான கருமி' 'நீ வேறம்மா, ஒரு நாளைக்கு வாய் ருசி கண்டா அப்புறம் சும்மா இருக்காது. வீட்டுல முடங்கிக் கிடக்கிற பனையேறி அப்பனுக்குப் பொடி வாங்கிக் கொடுக்கக்கூட காசு தேறாது. என்னையே நம்பிக்கிட்டு இருக்கிற தங்கச்சியைக் கரையேத்த முடியாது.” - - - அடேயப்பா ஒரு சோடாவுக்கர் இந்தப் பஞ்சப்பாட்டு? 'சிறு துளி பெருவெள்ளம் என்கிறது. மாதிரி, பெரு வெள்ளமும் சிறுசிறு துளியாய்ப் போயிடலாம்!" வெத்திலைக்காரரே நீர் மட்டும் படிச்சிருந்திரு இன்னேரம் தூள் கிளப்பியிருப்பிரு. மாரியப்பனும் தன்னால் படிக்காமலும் தூள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/59&oldid=882454" இலிருந்து மீள்விக்கப்பட்டது