பக்கம்:மூட்டம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியத்தின் ஒரு சின்னம்- தகர்த்துத் தரைமட்ட மாக்க்ப்பட்டது.தேச ஒருமைப்பாட்டு உண்ர்வின் மீது பேரிடி வீழ்ந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் பிடுங்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை சமூகத்தினர். இவ்வளவு பெரிய கொடுமை எத்தனை எழுத்தாளர்களின் நெஞ்சைக் குலுக்கியது? எழுத்தாளப் பிரபலங்களில் சு.ச.வைத்தவிர வேறு யாரும் இதை வைத்து நவீனம் படைத்ததாய்த் தெரியவில்லையே! சமகால வாழ்வைக் கலையழகோடு பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இலக்கியங்கள் திகழ வேண்டும். இங்கோ பல கண்ணாடிகள் ரசம் பூசப்படாதவையாக உள்ளன. அவற்றின் வழியாகப் பார்த்தால் எழுத்தாளர்களின் சுய வக்கிரங்களே, சுய குழப்பங்களே தெரிகின்றன. இவர்களி லிருந்து சு.ச.மாறுபட்டவர் என்பது திண்ணம். இவரது படைப்புகள் வாழ்வின் படப்பிடிப்புகள். அவ்வாறே இந்த "மூட்டமும்" உள்ளது. இந்த நவீனத்தின் பெயரே ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்து வருகிறது. இன்று இந்திய வாழ்வை ஒரு "மூட்டம்" சூழ்ந்து வருகிறது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் மத்தியில் பிளவுகள், பிரிவுகள் திட்டமிட்டு மூட்டப்படுகின்றன. அதிலும் படித்தவர்கள் நெஞ்சில் புதுப்புதுக் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நவீனத்தில் வரும் இரண்டு ஆசிரியர்கள் அந்நியோந்நியமாக இருந்த அழகு என்ன; பின்னர் அது சிதைவு பட்ட கோரம் என்ன! மதம் மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான் மதத்தை உருவாக்கினான். இந்த மெய்யைப் பொய்யாக்கிக் காட்டத்தான் ஒரு சுயநலக் கூட்டம் விடாது வேலை செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/6&oldid=882456" இலிருந்து மீள்விக்கப்பட்டது