பக்கம்:மூட்டம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் فسيكون 487 கிளப்பமுடியும் என்பதுபோல் அமீரைக் குறுக்கு விசாரணை செய்தான். 'என்ன பாய் இது? ராமர் கோவிலை இடிச்சிருக்காங்க? கண்ணால பார்த்தேன். நீங்க என்னடான்னா மசூதியை இடிச்சதாச்சொல்றீங்க? இடிச்சதுராமர் கோவிலா, மசூதியா? 'இடிச்சது மசூதியைத்தாம்பா இந்த அக்கிரமம் எங்கேயும் நடக்காது' 'நீங்கவேத டவுன்ல பெரிய பஸ் ஸ்டாண்டு பக்கம் பிளாட் பாரத்திலே ஒரு ராமர் கோயில் இருந்ததே கிளிக்கூண்டு மாதிரி... அதை யாரோ ராத்திரியோட ராத்திரியா இடிச்சுட்டாங்களாம். அந்தக் கோவிலுக்கு ஒரு பத்து பைசா சூடம் ஏத்தாத பயலுவ கூட இப்போ குதிகுதின்னு குதிக்கானுவ. அந்தக் கோவிலு முன்னால எச்சி துப்புன பய்லுவ, உண்டியல் திருடன பயலுவ எல்லாரும் இப்போ ராமருக்கு ஏதோ ஆபத்து வந்திட்டுதுன்னு கூப்பாடு போடுறாங்க. என்ன பாய் இதெல்லாம்? வாயில்லா ஜீவன், அவரை எதுக்கு இடிக்கணும்?" அமீர் எதையோ யோசிப்பது போல் தாடியைத் தடவிவிட்டது போது, மாரி அமீர் மனைவியிடம், தாயிடம் பேசுவதுபோல் பேசினான். பேகம்மா..நாள் வாரேன். காலையில இருந்தே நான் எதுவும் சாப்புடல. தலைசுத் துது.டாக்டர்கிட்டே போனால், பிளட் பிரஷர்னு சொல்லு வான். அதுக்கு முன்னாலேயே வீட்டுக்குப் போறேன்." பாத்திமாவிற்கு இதயம் வலித்தது. சம்ரத்யேகம் எங்க வீட்டுல சாப்பிடு' என்றாள். மாரியப்பன், தன் பாட்டுக்கு சைக்கிளை உருட்டப்போனபோது, அமீர் அவன் மார்பில் தனது வலதுகையை, குறுக்காய் வைத்தபடி சாப்பிட்டுப்போ என்றார். வேண்டாம் பாய்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/60&oldid=882458" இலிருந்து மீள்விக்கப்பட்டது