பக்கம்:மூட்டம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் نسهائیع / 59 'இப்பவே நான் சொன்னபடி கேட்க மாட்டேங்க. அப்புறம் எனக்குப் பங்காளியா மாறின. பிறகு எப்படிக் கேட்பே? நீ நல்ல பிள்ளையா நான் சொன்னதைக் கேட்பேன்னு நம்பனுன்னால், நீ இங்கேயே சாப்பிடணும். சாப்பிட்டுட்டு இங்கேயே இரு. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு.. சம்ரத் நான் ஜமாத்துக்கு போய்ட்டு currGựcśr. “ ! . . . . போண்மா வந்தமான்னு வாங்க். வாயைத் திறக்கப்படாது..இது வரைக்கும் பட்டபாடு போதும் மாரி தீ சாப்பிட வா!' அமீர்,ஆங்காங்கே அவரது வரவுக்காக காத்து நின்றவர்க ளோடு கலந்தார். சின்ன்ச் சின்னக் கூட்டங்கள் ஒன்றாகி, பெருங்கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த சம்ரத் பேகம், மாரியப்பனின் கையைப் பிடித்து இழுத்தபோது, அவன் தயங்கின்ாள். 'என்னப்பா இது. பாயுங்க வீட்ல சாப்பிடக்கூடாதுன்று யாரும் சொல்லிக் குடுத்தாங்களா' என்று பேகம் கேட்டபோது, மாரியப்பன் அந்த வீட்டுக்குள் முதலாவதாக ஓடினான். அந்த அம்மாள்கொல்லைப்புறக் கதவைத் திறந்து, அங்கே இருந்த சிமிண்ட் தொட்டியைச் சுட்டிக்காட்டி, ஒரு ஈயப்போணியை நீட்டினாள். மாரியப்பன், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். நான்கைந்து தெள்ளை மரங்கள். குலை போட்ட வாழைகளை சில்லாட்டைகள்மறைத்து மூச்சுமுட்ட வைத்துக் கொண்டிருந்தன. இப்படியே விட்டால் ஒரு தேங்காய் கூடத் தேறாது... பேகம்மா ஒரு அரிவாள் குடுங்க!” அந்த அம்மாள் காரணம் புரியாமல் அரிவாளை நீட்டிய போது, அவன் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு அரிவாளை இடுப்பில் சொருகிக் கொண்டு, தென்னை மரத்தில் ஒரே தாவாகத் தாவினான். கீழ்நோக்கிப் போன ஒலைகளை வெட்டினான். சில்லாட்டைகளின் அடிவாரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/61&oldid=882460" இலிருந்து மீள்விக்கப்பட்டது