பக்கம்:மூட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فمسعشهيe/69 அரிவாளால் கோடுகள் போட்டுப் பிய்த்தெறிந்தான். உடனே பாளைகள் தங்கநிறப் பெட்டகத்தில் பச்சை நிறக்காய்களைக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றை மாராப்பில் சுமப்பது போல் சுமந்து காற்றில் ஆடிக்காட்டின. மாரியப்பன் ஐந்த தென்னைமர உச்சிகளையும் துப்புரவாய்த் துலக்கிவிட்டு, கைகால்களைக் கழுவினான். உரிமையோடு கேட்டான். 'சரி இனிமே சோறு போடுங்க!” சம்ரத் பேகம் ஒரு கோரம் பாயை எடுத்துப் போட்டாள். சுவரோடு மடித்துப் போட்டாள். அவன் முன்னால் ஒரு தட்டை வைத்தாள். சுடச்சுட களி கொண்டுவந்தாள். அந்தக் கேழ்வரகுக்கூழ் நெருப்பில் வெந்து வெப்பக் கட்டியாய்க் கொதித்தது. பேகம், அதன் மேல்விதானத்தில் அகப்பையை வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். அது உள்வாங்கி வட்டக் கிணறுபோல் மாறியபோது, சமையலறைக்குள் போய் ஒரு ஈயப்பாத்திரத்தைக் கொண்டுவந்து அகப்பையால் ஊற்றினாள். அந்தப் பகுதிக்கு மட்டுமே அதிகமாய்ப் பரிச்சயப்பட்ட நறுக்குமல" கருவாட்டுக் குழம்பு...அதை அவசர அவசரமாய்க் களியோடு சேர்ந்து சாப்பிடப் போனவன், அதன் சுவையை அவ்வளவு சீக்கிரம் வயிற்றுக்குள் மூழ்கடிக்க விரும்பாதவன்போல் ஆற அமர ஒவ்வொரு விள்ளலாய்ச் சாப்பிட்டான். கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட சுவை உணவைக் கண்ட தில்லை. அப்பாவுக்கும் கிடைத்தால் சந்தோஷப்படுவார். அவன் பேகத்தைப் பார்த்து, இனிமே எப்பவும் என்னைச் சாப்பிடுன்னு சொல்லாதீங்கம்மா..அப்புறம் ஒங்களுக்கே மிச்சம் இருக்காது’ என்றான். சம்ரத் பேகம், தாய்மையின் பூரிப்பில் பெருமிதப்பட்ட போது, சாப்பிட்டு முடித்து மாரியப்பன் வெளியே வந்தான். பாத்திமாவின் கையிலிருந்த ஒரு பெட்டியைப் பார்த்தான். சதுரமானசெவ்வக மரப்பேழை. அவனைப் பார்தததும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/62&oldid=882462" இலிருந்து மீள்விக்கப்பட்டது