பக்கம்:மூட்டம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 / فسهشنبع சுெ.சமுத்திரம் திறந்தாள். வெல்வெட் மெத்தைப் பகுதிகளில் உள்ள விதவிதமான நகைகளைக் காட்டினாள். அவற்றிற்கு நேர்முக வர்ணனையும் தந்தாள். 'இது காசி மாலை. இதோ கவின் கம்புமாதிரி இருக்குதே இது கைவளை. இது காதோடதலை முடியை சேர்த்துக்கட்டுற தோட்டலு.அது சுங்கு. இது தலைசுத்தி." 'எனக்குத்தான் தலைசுத்துது. எதுக்கு இதெல்லாம்?" 'இது கில்ட்டு மேக்கப் செட்டு. ஏழைங்களோட கல்யாணத்துக்கு வாடகைக்குக் கொடுக்கிறதுக்காக காதர் பாட்சா, வ்ாப்பாவுக்கு வாங்கிக் கெர்டுத்திருக்கிறார்... இதுலயும் லாபத்துல, பாதிப்பாதி..' 'இதுங்களெல்லாம் உனக்குப் போட்டா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?" கலகலப்பாய்ச் சிரித்துப் பேசிய பாத்திமா சட்டென்று வாயடைத்துப் பார்த்தாள். மாரியப்பன், ஆடிப்போனான். 'நான் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய மாட்டேம்மா என்று கூடச்சொல்லப் போனான். ஆனாலும் அதற்குள் அந்தத் தெருமுனையில் இருந்த சாராயக் கடையில் ஒரு டேப் பாடல்..வடக்குப் பக்கம் முகம் திருப்பி நின்ற அந்தக் கடையின் கண்ணாடி அலமாரிகளில் பல்வேறு வண்ணபாட்டில்கள் நவராத்திரி பொம்மைகள் மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொம்மைகளே கூடிப்பாடுவது போல் உறுமி மேளத்தோடான பாட்டு. இருபொருள் தரும் அசிங்கமான பாடல். அதில் எழுதக் கூடியது இதுதான். 'சாராயம் நான் குடிச்சா நீயும் ஏண்டி ஆடுறே? சரக்குக்குச் சரக்காவந்து நீயும் ஏண்டி பாடுறே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/63&oldid=882464" இலிருந்து மீள்விக்கப்பட்டது