பக்கம்:மூட்டம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فبسبنيميع / 62 பாத்திமா, சங்கடத்தோடு தெளிந்தாள். அத்தஅப்பர்ஒயின் கடையில் பாடல்கள் ஒலித்ததுண்டு. ஆனால் இப்படி அசிங்கமாய் ஒலித்ததில்லை. அதுவும் இப்படிப்பட்ட சத்தத்தில்! அவளின் ஒவ்வொரு முகச்சுளிப்பிற்கும் ஏற்ப மாரியப்பனின் உடம்பு ஒவ்வொருவிதமாய் இறுகியது. கத்தியபடியே அந்தக் கடையை நோக்கிப் போனான். உள்ளே நின்ற நான்கு பயல்களை, வெளியே வரும்படி குரலிட்டு நடந்தான். 'என்னடா தினைச்சிய...அக்கா தங்கச்சியோட பொறக்காத அற்பப் பயலுவளா?” 5 அந்த மசூதித்தளத்திற்குள், வரிசை வரிசையாகவும், வரை. வரையாகவும் விரிக்கப்பட்ட கோரம் பாய்களில் இப்போது சின்னச் சின்ன இட்ைவெளிகள் மட்டுமே தெரிந்தன. அந்தப் பாளையத்தில் உள்ள பத்து இஸ்லாமியத் தெருக்களில் எட்டுத் தெருக்களில் வாழும் பீடித் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் தவிர, அனைவருமே ஜமாத்துக்கு வந்து விட்டார்கள்; அப்படி வரும்போது இடையிடையே எதிர்ப்பட்ட இந்துக்கள் சர்வ சகஜமாக பேசியபோது, பெரும்பாலானவர்கள் பதில் பேசவில்லை என்றாலும் நின்று நிதானித்துக் கேட்கத்தான் செய்தார்கள். அந்த மசூதி கம்புக்கட்டுகளோடு தோற்றமளித்தது. சிலருக்கு அதை யாரோ இடித்துப் போட்டது போலவும், இப்போது அதற்கு பேண்டேஜ் போட்டிருப்பது போலவும் தோன்றியது. சாந்தமாக வந்தவர்கள் கூட பாயில் உட்கார்ந்த சகாக்களைப் பார்த்ததும் கோபமுகம் காட்டினார்கள். அப்பாவிகளுக்குக் கூட ஒரு அசுரத்தனம் ஏற்பட்டது. ஒவ்வொரு முகத்திலும் ஒரு பூகம்பம்; ஒவ்வொரு நெஞ்சிலும் ஒரு எரிமலை. பழைய விரோதங்கள் மறக்கப்படவில்லையானாலும், அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/64&oldid=882466" இலிருந்து மீள்விக்கப்பட்டது