பக்கம்:மூட்டம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قبسه تعاع / 64 மசூதியின் வாசலுக்குப் போய்ப் பார்த்தார். ஒரு தடவை தனது வீட்டுக்கு முன்னால் யாரும் இல்லாததில் ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை அப்புறம் ஏற்பட்ட துக்கம் விழுங்கிவிட்டது. மசூதி வாசலில் நின்று பார்த்தால், முத்துக்குமார் பயல், காதர்பாட்சாபயலோடு நின்று கொண்டு அவனைப் பார்க்காமல் அடுத்த பக்கம் பார்க்கிறான். அந்த ஆயிஷா கழுதையும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கம்பிகளில் முகம்பதித்து உதடுகளைக் குவிந்தபடி பார்த்தால் கூடத் தேவலை...சிரிக்கிறாள்...திரும்பி வந்த அஜீஸ் மூன்றாவது தடவை எழுந்தபோது நூருல்லா, திவான் முகமதின் முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டுபோய் அஜீஸைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் ஆறுதல் தேவைப்பட்டது. அவரது பீடித் தொழிற்சாலையைச் சேர்ந்த பல பயல்கள் மேலக்கோடித் தெருவில் உள்ள ஒரு நர்சரிப்பள்ளிக் கூடத்தில் முதலாவது யூனியன் அமைப்பதில் தீவிரமாக இருக்காங் களாம்..இந்த மூவரோடு சிறிது தள்ளி இமாம் அதே தலைப்பாகையுடன் இருந்தார். அவரை இவர்களோ, இவர் களை, அவரோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. திவான் முகமது ஜமாத்தைத் துவக்கி வைத்துக் கோபமாகத்தான் பேசப் போனார். ஆனாலும், தொழுகைத் தளவாசலை ஒட்டி கையில் ஒரு துண்டை, பட்டும் படாமலும் தொங்கப்போட்டபடி நின்ற காண்ட்ராக்டர் ராமலிங்கத்தைப் பார்த்ததும் அவர் கண்கள் கனிந்தன. கைகள் ஊறின. வாய், சினேகித முறையில் சிரிக்கப் போவதுபோல் இருந்தது. ஆனாலும் அவ்ர் உஷாரானார். அதே சமயம், அவருக்கு ரேட்டைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பதிலும் குறியாயிருந்தார். அவரை அப்போதுதான் பார்ப்பது போலவும், அந்த நேரத்தில் அவர் வரவை அங்கீகரிக்காதது போலவும் தாக்குதல் தொடுத்தார். அதோடு இலேசான எரிச்சல். பழைய ரேட்டுக்கு ஏற்ப வேலையளவில் சில சித்துக்களை செய்து செக்கும் கொடுத்தாகிவிட்டது. மாமூல்தான் வரவில்லை. வந்துட்டான் பெரிசா..."என்ன ராமலிங்கம்? இங்கேயுமா ஒங்க தொல்லை?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/66&oldid=882470" இலிருந்து மீள்விக்கப்பட்டது