பக்கம்:மூட்டம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فتوى/65 "ஜமாத்திலே எனக்கு நியாயம் வழங்கணும். எல்லா விலையும் கூடிட்டு. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் கூடக் கிடைக்கமாட்டேங்கு. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போறது மாதிரியாவது, ஜமாத்து எனக்கு கருணை காட்டனும். கூட்டத்தில் மூன்றாவது வரிசையில் இருந்த சுலைமானுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இவரும் சின்ன காண்ட்ராக்டர். மசூதி மாடி கட்டும் பணியை தன்னிடம் ஒப்படைக்கும்படி திவான் முகமதுவிடம் மாமூலாகத்தான் கேட்டார். ஆனால் அவரோ தார் ரோடு போடுற அவருக்கு கட்டிடக்கலை கைவராத கலை என்று சொல்லி விட்டார். அவராவது யூனியன் ரோடுகளைப் போடுபவர். ஆனால் இந்த ராமலிங்கமோ பஞ்சாயத்து ரோடுகளைப் போடுபவர். இவருக்குக் கொடுத்துவிட்டார். விடலாமா? விடப்படாது. 'இதோ பாருங்க ராமலிங்கம். நீங்க அதிகமாகப் பணம் வாங்கி இந்த மசூதியை இன்னும் அழகா முடிச்சாலும் என்ன பிரயோசனம்? பாபர் மசூதியை இடிச்சது மாதிரி உங்க ஆட்கள் இந்த மசூதியையும் ஒரு நாள் ஒரு பொழுதாவது இடிக்கத்தான் போறாங்க." கூட்டத்தில் ஒரு பகுதி ராமலிங்கத்தை கோபமாகப் பார்த்தது. அதற்கு ஏற்றாற்போல், அவர் நெற்றியில் தீட்டியிருந்த பட்டையும், அதன் மத்தியில் வைக்கப்பட்ட குங்குமமும் வேண்டுமென்றே அவர் வம்புக்கு இழுக்க வந்ததுபோல் பட்டது. பின்வரிசையில் இருந்த சம்சுதீன், அப்பனுக்க்ே வேட்டு வைப்பது தெரியாமல் வெடிக்குரலில் கத்தினான்." 'முதல்ல அவரை வெளியேற்றுங்க. இந்த ஜமாத்துல ஒரு இந்துக்கு என்ன வேலை? இங்கு நடக்கிறத ஒட்டுக்கேட்டு முன்னணிக்காரங்ககிட்டே சொல்றதுக்கா? சுலைமானுக்கு பாயிண்ட் கிடைத்து விட்டது. .ேஒ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/67&oldid=882472" இலிருந்து மீள்விக்கப்பட்டது