பக்கம்:மூட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் نفسه نعم/66 யோவ் ராமலிங்கம் எவ்வளவுய்யா கூலி கொடுத்தாங்க. 'பிடிச்சு கட்டி வையுங்கடா அவனை: சம்சுதீனும், ராமலிங்கத்துடன் ஒரு நிலத் தகராறில் ஈடுபட்டிருக்கும் இன்னொருத்தரும், சுலைமானும் இப்படிப் பேசியதில் ராமலிங்கம் அதிர்ந்து போனார். இந்தச் சமயத்தில் முதல் வரிசையில் இருந்து அமீர் , ஒரு பக்கம் இருந்த பேராசிரியர் இதயதுல்லாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர் அப்படியும் சும்மா இருக்க, இறுதியில் அமீரே உரக்கப் பேசினார். 'இந்த ராமலிங்கம் நமக்கு எதிரியா? அயோத்தியிலே ராமர் கோவில் இடிக்கிறதுக்கும் டெண்டர் போடுறவரு. ஏன்யா ராமலிங்கம்... உமக்கு சமயம் சந்தர்ப்பம் தெரியாதா?...பேசாமப் போங்க." 'ஒட்டுக் கேட்க வந்தவன் எப்படிப் போவான்?" பின்வரிசையில் துள்ளி எழுந்த கலைமானையும், தன்னை நேருக்கு நேராய்ப் பார்த்த அமீரையும் ராமலிங்கம் ஒப்புக்குப் பார்த்து விட்டு, திவானை ஆறுதலாகப் பார்த்தார். அவரும் கத்தினார். கண்ணைச் சிமிட்டியபடியேதான் கத்தினார். ஆனால் காண்ட்ராக்டருக்குக் கத்தியதுதான் காதில் ஏறியதே தவிர, கண் சிமிட்டல் கண்ணில் படவில்லை. யாருய்யா இவரு? கால நேரம் தெரியாம! நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லுப் போதாதா?’ என்று திவான்.அவரைப் பார்க்காமலே சொன்னபோது, ராமலிங்கம் அடிவாங்கிய மாடானார். மெல்ல மெல்ல தலையைக் குனிந்து கொண்டும், ஒருவேளை கூப்பிடுவார்களா என்பது போல் காதுகளை அனிச்சையாக நிமிர்த்திக் கொண்டும், வெளியே நடந்தார். அவர் நடந்த விதத்தைப் பார்த்து, திவான் அசந்துவிட்டார். பயல் சொன்னபடி பழைய மாமூலைக் கூட தரமாட்டானோ...' திவான் முகமது பேசப்போன போது, பழனிவேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/68&oldid=882474" இலிருந்து மீள்விக்கப்பட்டது