பக்கம்:மூட்டம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0கசமுத்திரம் قبات مع / 67 கடைகள்ல பேன்சி கடை வைத்திருக்கும் காதர் பாட்சாவும், தாவர இயல் உதவிப் பேராசிரியர் முத்துக்குமாரும் கையோடு கைகோர்த்து உள்ளே வந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த படியே ஒரு ஒரமாக நின்றார்கள். கூட்டத்தில் யாரும் அவர்களைப் பொருட் படுத்தாதபோது, ஆயிஷாவின் தந்தை ஹாஜி அஜீஸ் பொரிந்து தள்ளிவிட்டார். பெரிய மைத்துணி மகன் காதரைப் பார்த்துக் கத்தினார். 'காதரு! உனக்கும் இந்தப் பிள்ளையாண்டானுக்கும் ஆயிரம் உறவு இருக்கலாம். அதையெல்லாம் வெளியிலே வச்சுக்கணும். இங்க மட்டுமில்ல...இந்தப் பக்கம் உள்ள தெருவிலேயும் வச்சுக்கப்படாது. இது ஜமாத்து. கிள்ளுக்கீரையில்லை." காதர் பாட்சா துடிதுடித்துப் போனான். எதேச்சையாய் முத்துக்குமாரைத் தன் பக்கமாய் அனைத்துக் கொண்டே கேட்டான்: 'என்ன சச்சா, இப்பிடிப் பேசறியே? இவன் தலையிலே குல்லா போடல, சுன்னத் செய்யல என்கிறதைத் தவிர எல்லா விஷயத்திலேயும், இவன் நம்ம கூட இருக்கவன். மசூதி இடிச்சதைக் கேட்டதும் இவன் சோறு தண்ணி கூட சாப்பிடலேன்னு எங்கிட்ட இவங்க அம்மா முறையிடறாங்க. மசூதி இடிப்பு இந்து-முஸ்லிம் கலாட்டாவா மாறாமல் இருக்க இவனும் நானும் ஒரு திட்டம் கூட வச்சிருக்கோம். இதைச் சொல்லத்தான் வந்தோம். இவனைப் போகச் சொல்றது என்னைப் போகச் சொல்றது மாதிரி. 'நீ இருக்கறதும் இல்லாததும் ஒன்னுதான். உன்னை மாதிரி உதவாக்கரைங்க இஸ்லாமிலே பிறந்ததாலதான் காபீர்கள் பாபர் மசூதியை இடிச்சாங்க...இந்த மசூதியையும் இடிக்கப் போறாங்க. ' அமீர் இப்போது கொதித்துக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/69&oldid=882476" இலிருந்து மீள்விக்கப்பட்டது