பக்கம்:மூட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருகிறது. ஆனாலும் மனம் சோரத் தேவையில்லை. அமுக்கப்படும் இயல்பான மனிதநேய உணர்வுகள் விடுபட்டுக் கிளம்பவே செய்யும் பல நூறு ஆண்டுக்கால வரலாற்றில் தமிழசம் எத்தனையோ மதமோதல்களைக் கண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மீறித்தான் அது நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிற மாநிலங்க ளோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் சகிப்புத் தன்மை யையும். நல்லிணக்கமும் எவ்வளவோ சிறப்பாக உள்ளது என்று தான் கூற வேண்டும். இதற்காக எத்தனையோ பெரியவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள், எத்தனையோ முற்போக்கு இயக்கங்கள் பணிபுரிந்திருக்கின்றன. அவர்கள் விதைத்தவிதை என்றும் வீணாய்ப்போய் விடவில்லை. மதப் பெரியார்களின் சதித்திட்டங்களையெல்லாம் மீறி இங்கே இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ ஒற்றுமை நிலவி வருவது அதற்குச் சாட்சி. இந்த நவீனமும் நம்பிக்கை மிகுந்த இந்த அடிப்படை யதார்த்தத்தோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நவீனத்தின் கதாபாத்திரங்கள் நம் மத்தியில் உலவி வருபவர்கள்தாம். ஓர் ஊரேமுற்றுகையிடப்படுவதும், போலீஸ் அட்டூழியமும் கூட புதிது அல்ல தான். பத்திரிகை களில் வந்த செய்திகள்-நமக்கு அவை செய்திகள்; சு.ச.விற்கோ அவற்றில் இலக்கியம் தட்டுப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மனித குலத்தின் மீது பாசமிக்க ஓர் உள் ளத்தை வாசகர்கள் கண்டுகொள்வார்கள். சமகால வாழ்வு பற்றிய படைப்புகளில் செய்தி அதிகமாகவும், இலக்கியம் குறைவாகவும் இருப்பதாக சில நவீன பண்டிதர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். அப்படியா? அது உண்மையெனில் ஏன் இந்த மோதாவிகள் இலக்கியம் குறைவு படாமல் சமகால வாழ்வைப் பிரதிபலிக்கக் கூடாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/7&oldid=882477" இலிருந்து மீள்விக்கப்பட்டது