பக்கம்:மூட்டம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فهسثسوع / 68 'மசூதியையும் கோவிலையும் விட மனுசங்க முக்கியம் காக்கா 'தம்பி முத்துக்குமாரு, உன்னால் எவ்வளவு இடஞ்சல் பாரு, இன்னுமா நிற்கிறது?" முத்துக்குமார் அங்கும் இங்குமாய்ப் பார்த்தான். சம்சுதீனைத் தோழமையோடு நோக்கினான். அவனோ, வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஆயிஷாவாலோ அல்லது இயல்பான மனோபாவத்தாலோ இஸ்லாமியனாக மாறவில்லையென்றாலும், அதற்கு மதிப்பு கொடுப்பவன். மசூதி பாளையத்தின் எல்லாத் தெருக் களையும் சொந்தத் தெருக்களாக நினைத்து நடமாடியவன். இப்போது எங்கே நிற்கிறோம், அல்லது நிறுத்தப்பட்டோம் என்பது புரியாமல் திரும்பிப் பாராமலே நடந்தபோது, அவனை காதர் பாட்சா பின்பக்கமாய்ப் போய் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். முத்துக்குமார் கண்ணிரும், கம்பலையுமாய் அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டான். இருவரும் மசூதிக்கு வெளியே வந்தபோது ஜன்னலில் முகத்தை எடுக்கப்போன ஆயிஷா, அவர்கள் நின்ற. கோலத்தைப் பார்த்துப் பதறியடித்து வெளியே வந்தாள். ஜமாத் தலைவரான திவான் முகமது, மீண்டும் பேசப்போனபோது அஜீஸ் மீண்டும் எழுந்திருக்கப்போனார். முத்துக்குமார் பயல் வீட்டுப்பக்கம் என்ன செய்கிறான்... அதற்குள் திவான் பேசிவிட்டதால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. திவான் செந்தமிழிலும் இல்லாமல், பேச்சுத் தமிழிலும் இல்லாமல் இடைப்பட்ட தமிழில் எதார்த்தமாகப் பேசினார். அவராலும் உண்மை பேச முடிந்தது. 'நாம் ஏன் கூடியிருக்கோம் என்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும். நாமும் இந்த ஊர்ல. இரண்டு தெருவில இருக்கிற இந்துக்கள் மாதிரி இந்த மண்ணுலேயே பிறந்தவங்க. நமக்கு பாகிஸ்தானும் தெரியாது. பங்களாதேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/70&oldid=882479" இலிருந்து மீள்விக்கப்பட்டது