பக்கம்:மூட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شستروع / 69 புரியாது. மேற்குத் திசை நோக்கித் தொழுகை செய்யறதைத் தவிர நாம எல்லாத் திசையிலேயும் இந்தியாவைத்தான் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நம்மோட பழைய காலத்துப் பாபர் மசூதிய இடிச்சுட்டாங்க. இடிச்சது மட்டுமில்லை. இந்தியாவுலே பல இடங்களிலே முஸ்லீம்களைக் கொன்று குவிக்காங்க. இதை நாம் எப்படிச் சமாளிக்கலாம், கஷ்டப்படுற நம்ம இனத்துக்கு என்ன உதவி செய்யனும் என்கிறதைப் பத்தி ஜமாத் ஒரு முடிவு எடுக்கணும்.' அமீர், படபடப்பாக பதில் அளித்தார். 'பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும், இன்னும் பல இஸ்லாமிய நாடுகள்ளேயும், இந்துக்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகளையும் நாம கணக்கில் எடுத்துக்கணும். நம்மோட முதல் கரிசனம் குறைந்தபட்சம் இந்தப் பகுதியி லாவது இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறதாய் இருக்கணும். 'இஸ்லாம் எமது வழிபாடு. இந்தியா எங்கள் தாய்நாடு என்கிறதிலே நமக்குச் சந்தேகம் வரப்படாது. அதே சமயம் இங்கே இருக்கிற இந்துக்களோட நாம வழிவழியா மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா உறவு வச்சிருக்கிறத மறந்திடக்கூடாது. எங்க பழைய வீட்டுப் பாத்திரத்திலே எங்க தாத்தாவோடபேரு பெருமாள்சாமி என்கிற நயினார் முகமது என்று போட்டிருக்கு. இந்த உறவை மறந்து நம்ம ஆட்களும் நேத்து ராத்திரியோட ராத்திரியா டவுனுல ராமர் கோவிலை யும், பிள்ளையார் கோவிலையும் இடிச்சத நாம கண்டிக் கணும்.' திவான் முகமதுவால் தாள முடியவில்லை. பழைய கணக்குப் பிள்ளையை அந்தத் தொழில் வகையில் பிடிக்க முடியாது போனவர், இப்போது அவரை எங்கே பிடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்தவர் போல் அங்கே பிடிக்கப் போனார். 'இஸ்லாமுக்குள்ளேயே அல்லாவையும் ஈமானையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/71&oldid=882481" இலிருந்து மீள்விக்கப்பட்டது