பக்கம்:மூட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فسائي يع/72 'என்ன முடிவு எடுக்கணும் என்கிறதவிட என்ன முடிவு எடுக்கப்படாது என்கிறதுதான் முக்கியம். பாபர் மசூதி இடிக்கப்பட்டது நம்ம வீட்டிலேயே ஒரு இழவுவிழுந்தது மாதிரிதான், இல்லங்கல. ஆனால் முற்காலத்திலே இதே மாதிரியான சந்தர்ப்பத்திலே, நபிகள் நாயகத்தினுடைய பாட்டனார் அப்துல் முத்தலிபு எப்படி நடந்துக்கிட்டார்னு யோசித்துப் பார்க்கணும். நகரங்களின் தாயான மெக்காவில், ஏக இறைவனின் முதல் ஆலயமான காபாவை, அபிசீனிய நாட்டு அதிபதி அப்ரஹா என்பவன், யானைப் படையோடு தாக்க வரும்போது, அங்கிருந்த குர்ஷி மக்களோடு நகரத்தைக் காலி செய்யப் போன அப்துல் முத்தலிபு அந்த ஆலயத்தின் மூடியிருந்த திரையைப் பிடித்துக் கொண்டு என்ன சொன்னார். 'இறைவனே! இது உன்னுடைய வீடு, இதைப் பாதுகாக்க இயலாதவர்களாய் நாங்கள் இருக்கிறோம். ஆகையால் உங்கள் வீட்டை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்: என்று அழுதழுது சொன்னாரே...அந்த அழுகை, ஒரு ஒற்றைக் குருவியை உசுப்பி, ஆயிரமாயிரம் குருவிகளை அலகுகளி லும், கால் இடுக்குகளிலும் கற்களைக் கொண்டுவரச் செய்து அபிசீனியப் படையை சின்னாபின்னமாக்கி காப்ாவைக் காக்கலியா? ஒரு தடவை நபிகள் நாயகமே தன் புதல்வியிடம் என்ன சொன்னார்? அவர்கள் என்னை அடிக்கவில்லை. அல்லாவைத்தான் அடித்தார்கள் என்று கோபமற்ற குரலில் சொல்லவில்லையா? ஆகையால் மதவெறியர்கள், பாபர் மசூதியை மட்டும் இடிக்கவில்லை. எவர் தங்களை ஆக்கி, எவர் தங்களை இந்த உலகில் உலவ விட்டாரோ, எவர் தங்களுக்கு வீடுகளைக் கொடுத்தாரோ அவர் வீட்டை இடித்திருக்கிறார்கள். ஆகையால் அல்லா பார்த்துக்குவார். இன்ஸா அல்லா. ஜமாத்தை முடிக்கலாம்.' எல்லோரும் அசந்து போனார்கள். 'கேனையன் மாதிரி வேட்டியோ, லுங்கியோ கட்டிக் கொண்டு, மசூதிப் பக்கம் வந்தால்கூட, அதைத் திரும்பிப் பார்க்காத காதர்பாட்சா போட்ட போட்டில் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள். பேராசிரியர் இதயத்துல்லாவுக்கு மனத்தாங்கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/74&oldid=882486" இலிருந்து மீள்விக்கப்பட்டது