பக்கம்:மூட்டம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستنساح / 73 காதர், எங்கே பட்டிமன்ற நடுவராகி தனக்குப் போட்டியாய் விடுவானோ என்ற பயம்...அதே சமயம் தாவர இயல் படித்தாலும் தமிழியலில் தேர்ச்சி பெற்ற முத்துக்குமார், காதருக்கு எழுதிக் கொடுத்திருப்பானோ என்று அவருக்கு ஒரு ஆனந்தமான சந்தேகம். மற்றவர்களோ குறிப்பாக இளவட்டங்களோ, காதர்பாட்சா கலைந்து போகும்படிச் சொல்லாமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனாலும் பெரியவர்கள் சிலர் மெளனித்தனர். அந்தச்சமயம் பார்த்து இன்னொரு டேப் பாடல்...அதுவும் இருபொருளிலான வார்த்தைகள்....பாட்டிலும் ஒரு சாராய நெடி... கூட்டம் பரபரத்து. படபடத்தது. இளவட்டங்கள்தரையில் கை ஊன்றாமலே எழுந்தனர். திவானின் முகமது யேர்சித்தார். பழனிவேல் பயலுக்கு பாடம் சொல்ல... நல்ல சந்தர்ப்பம்...அவன் கோர்ட்ல ஸ்டே' வாங்கப் போகவே முடியாது. நேரம் இருக்காது... கத்தினார். 'பழனிவேல் சாராயக் கடையில பாட்டப் பாத்தீங்களா. இதுக்கு மேலயும் பொறுத்தால், நாம முஸ்லீம்கள் அல்ல. திருக்குரானில், ருக்கு இரண்டில் கூறப்படுவது போல், "அதோ பாட்டுப் போட்டவர்களின் இதயத்திலும், அவங்கள பாட வச்ச பயல்க மனசிலும் ஒரு நோய் இருக்கு...அல்லா வேண்டும் என்றே அந்த நோயை அதிகமாக்கிட் டான்...'இன்சா அல்லா, எழுந்திருங்க..." கூட்டம் எழுந்த போது, அமீர் உரத்த குரலில் மன்றாடினார். 'நாம் தும்ப விட்டுவிட்டு வாலைப் பிடிக்கோம் இஸ்லாமியத் தெருவுல, அந்த மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக் கூடாதுன்னு, அப்பவே ஜமாத்துல சொன் னேன். யாரும் காது கொடுக்கல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/75&oldid=882488" இலிருந்து மீள்விக்கப்பட்டது