பக்கம்:மூட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فساكسوع / 75 பாட்டு. முன்பு ஒலித்ததை சாதாரணமாக்கும், அசாதாரண ஆபாசப் பாட்டு...இப்போது அமீருக்கும், காதருக்கும் கூடக் கோபம் வந்தது...அப்படியும் அவர்கள் கூட்டத்தை வழிமறித்தார்கள்...கூட்டத்தார் கேட்பதாயில்லை. ஒரே கூச்சல்...ஒடுங்கடா... சுற்றி வளையுங்கடா...இப்படியே விட்டால் நம்ம வீட்லயும் கதவைத் தட்டுவானுவ... வாங்க...வாங்கடா... 6 அந்த மசூதிக்குள் இருந்து ஒரு பெருங்கூட்டம் பீறிட்டு வெளிப்பட்டது; ஆங்காங்கே தெருத்திண்ணைகளில் உட்கார்ந்திருந்த மூதாட்டிகளும், ஜன்னல்களில் கண்பதித்திருந்த பெண்களும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஒடினார்கள். புடவைக்கு மூடி போலவும், தலைக்கு மகுடம் போலவும், முகத்திற்கு முகமூடி போலவும் உடுத்திய சேலைக்கு மேலே உச்சி முதல் பாதம் வரை மின்னும் கருப்பு நிற அங்கியை அணிந்து, பாதங்களை செருப்பு மறைக்க, வெறும் மூக்கையும் வாயையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வசதி படைத்த பெண்களும், பீடி இலைகளைக் கத்தரித்து அவற்றின் தும்புத் துகளோடு கொண்டைகளில் பூவுக்குப் பதிலாக முந்தானையைச் சொருகி இருந்த பெண்களும் ஒடோடிப் போனார்கள். அந்தக் கூட்டத்திற்கு எதிரே நின்று கைகளை ஆகாயத்தை நோக்கித் தூக்கிக் காட்டியும், முன்பக்கமாய் நீட்டிப் போட்டும் அமைதி காக்கக் கோரினார்கள். அமீரும் காதர்பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் அந்தப் பெண் கூட்டத்திற்கு முகப்பாகி கூட்டத்தைப். பார்த்துக் கும்பிட்டார்கள். கூட்டம் கேட்பதாக இல்லை. வழிமறித்த பெண்களுக்கு இடையே ஊடுருவியும், பக்கவாட்டில் கடந்தும் வேகவேகமாக ஓடினார்கள். இதற்குள், பல பெண்கள் அவசர அவசரமாய் தத்தம் சொந்தங்களை கூட்டத்தில் கண்டு, அந்தக் கூட்டத்தைக் கிழித்தபடியே அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/77&oldid=882492" இலிருந்து மீள்விக்கப்பட்டது