பக்கம்:மூட்டம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسبئيyع / 77 கையை ஓங்கினால், அது அப்புறம் தரையில்தான் விழனும்!" 'இதே போல மேலத்தெருப் பக்கமாகவும் போகணும். முஸ்லிம் பள்ளிக்கூடத்திலே முருகானந்தம் மாதிரி காபீர் பயல்களுக்கு என்ன வேலை? நமக்கு எதிராகவே நம் ஆட்களைத் தூண்டிவிடுகிறான். நாம தாங்கிக்க முடியுமா? 'எல்லாத்தையும்விட அந்த சாராயக்கடை முக்கியம்! நமக்கு மானம் மரியாதை இருக்கு என்கிறத காட்டுறதுக்கு அந்தக் கடையை அடியோட இடிக்கனும்!” எந்தப் பக்கம் போவது என்று யோசித்த கூட்டம், அந்த முப்பெரும் தலைவர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள உறவில் எந்தப் பக்கம் தராசு முள் சாய்ந்ததோ, அந்தப் பக்கம் பாய்ந்து போனார்கள். இடையிடையே கற்களையும் கம்புகளையும் பெண்களின் ஒப்பாரிப் பின்னணியில் எடுத்துக்கொண்டு பேயோட்டமாக ஓடினார்கள். கிழக்குப் பக்கமாக ஒடிய கூட்டம், வழிமறித்த ஒரு கல் கட்டிடத்தின் பாளம் பாளமான சுவர் கற்களை எடுத்துக் கொண்டு, குட்டை மாதிரியான ஒரு பள்ளம் வழியாய் உருண்டோடி, மீண்டும் மலையேறுவது போல் ஏறி, தெற்குப் பக்கம் உள்ள கருவேல மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டு, தென்முனைக்கு வந்து ஒரு விளையாட்டு மைதானத்தை ஊடுருவிக் கிழக்குப் பக்கம் ஒடி, இந்துக்களின் முதலாவது தெரு முனைக்கு வந்து நின்றது. வெளியே நின்ற பெண்கள் முதலில் அவர்களை சினேகிதமாய்ப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டார்கள். கூட்டம் ஏளனமாய் நினைத்து கைகளை ஓங்கி முன்னோக்கி நடந்தபோது, அவர்கள் அலறியடித்து உள்ளே ஓடினார்கள். ஆங்காங்கே நின்ற கணவனையோ, பிள்ளை களையோ தத்தம் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கதவுகள் சாத்தப்பட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. அப்படியும் தாக்கப்படுவோமோ என்ற அலறல்கள். 'எய்யோ எய்யோ எம்மோ என்ற ஒப்பாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/79&oldid=882494" இலிருந்து மீள்விக்கப்பட்டது