பக்கம்:மூட்டம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் மனக்குகை மர்மங்களை, அதுவும் மர்மமான மொழியில் எழுதிப் பயமுறுத்த வேண்டும்? அழகியல் ஊனப்பட்டு விடக்கூடாது என்பதில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் முழு உடன்பாடு தான். ஆனால் அதை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டு நமது வாழ்வை நேரடியாகப் பாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தொடாமல் தப்பித்து ஓடுவதை நாம் அங்கீகரிக்க முடியாது. - இந்த நவீனத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை தைரியமாகவும் இலக்கிய சீதனத்தோடும் எதிர் கொள்ளப் பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாழ்வை, உணர்வு களை பெரும்பான்மை வகுப்பைச் சார்ந்த ஒருவர் சித்தரிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணமாக உள்ளது. சு.ச.விற்கு நமது வாழ்த்து உரித்தாகிறது. இரா.கதிரேசன் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/8&oldid=882495" இலிருந்து மீள்விக்கப்பட்டது