பக்கம்:மூட்டம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78/ عyفه سائد - சுெ.சமுத்திரம் அந்தக் கூட்டம், தங்களை வரவேற்பது போல் தோன்றிய அந்தக் தெருவின் தீவுத்திடல் மாதிரியான ஒரு தூக்கலான இடத்தில், மாரியம்மனை குறி வைத்து நடக்கப் போன போது... முத்துக்குமார், ஏழெட்டுப்பேரை வலுக்கட்டாயமாகக் கூட்டி வருவது போல் கூட்டிப் போனான். கூட்டம் அதை, சவாலாக நினைத்து கத்திய போது, அவன் தனது இரண்டு கைகளையும் தூக்கியபடியே தனது கூட்டத்திற்கு முன்னால் போய் நின்றான். அலறியடித்து ஓடி வந்த பெண்களை ஆங்காங்கே நிற்கும்படி திரும்பிப் பார்த்து கையாட்டி விட்டு, அவன் கூட்டத்திற்கு முன்னால் மேலும் நெருங்கினான். காதர்பாட்சா, அவன் தோளில் கைபோடப் போன போது, கூட்டம் பாட்காவை பின்னோக்கி இழுத்தது. முத்துக்குமார் அன்மதியாய்ப் பேசினான். 'இதோ உங்ககிட்ட எங்களை ஒப்படைச்சிட்டோம். சிறுபான்மையை பெரும்பான்மை காக்க வேண்டியது முறை. இதைத் தான் நீங்களும் சொல்றீங்க. இங்கே நாங்க சிறுபான்மை. எங்களைக் காக்க வேண்டியது உங்க கடமை. அப்புறம் உங்க இஷ்டம். இதே மாரியம்மன் கோவிலுக்கு நான் வரி கொடுக்கல. கோவில் விஷேசம் நடக்கும் போது, டவுனுக்கு போயிடுவேன். ஆனால் இந்தக் கோவில் விசேஷத்துக்கு அஜீஸ் பாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். நூருல்லா பாய் பத்து தேங்காய்களைத் தந்திருக்கிறார். கூட்டம் அசந்து நின்ற போது, ஒரு குரல் அதட்டியது: 'சும்மா நடிக்காதேப்பா, இங்க சில வீட்டிலேயே திராவகம் ஊத்தி வச்சிருக்கிறது எங்களுக்குத் தெரியும. நாட்டு வெடிகுண்டு இருக்கிறதாம். நாங்க சோதனை போட்டாகணும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/80&oldid=882496" இலிருந்து மீள்விக்கப்பட்டது