பக்கம்:மூட்டம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قساشعاع / 79 - 'சரி, போடணுமுன்னாபோடுங்க! அதுக்கு முன்னால எங்க பெண்டு பிளளைங்கள ஒங்க வீடுகளிலே அடைக்கலமாகக் கொண்டு வந்து விட்டுடறோம்.' அந்தக் கூட்டத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதாவது இசகு பிசகான ஒரு வார்த்தை விழுந்தால் கொலை கூட விழுந்திருக்கலாம். ஆனால் அந்தத் தெருவாசிகளால் தண்ணிர் தெளித்து விடப்பட்ட முத்துக்குமார், தான் கூட்டி வந்த நடுத்தர வயதுக்காரர்களைப் பேசாது தடுத்துவிட்டான். மெளனமாக தலை குனிந்து நின்றான். அப்படியும் அஜீஸின் அக்கா மகன் கத்தினான். காத்திருந்தவன்.ஆயிஷாவை, நேத்து வந்த முத்துக்குமார் கண்ணடிப்பதா? ‘இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும்! பொல்லாத போக்கிரி!' காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்த படியே சர்வசாதாரணமாகக் கேட்டான். - 'யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும்!" முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். பிறரை அழவைப்பது தவிர , அழுது பழக்கப்படாத அவனைப் பார்த்து காதர்பாட்சாவே ஆச்சரியப்பட்டான். பிறகு அவனைத் தன் பக்கமாய்த் திருப்பி அப்படியே அனைத்துக்கொண்டான். இதற்குள், அமீரும் அங்கே ஓடிவந்தார். அந்தத் தெருவில் இருந்து தள்ளாடித் தள்ளாடி வந்த துரைச்சாமியை அங்கேயே நிற்கும்படிச் சொல்லிவிட்டு, இவர் அங்கே ஓடினார். உங்க மகன் முத்துக்குமாருக்கோ இவங்களுக்கோ எதுவும் நடக்காது முதலாளி என்று சொன்னபடியே திரும்பி ஓடிவந்தார். இதற்குள் அந்தக் கூட்டத்திற்குள், ஆங்காங்கே தெருவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/81&oldid=882498" இலிருந்து மீள்விக்கப்பட்டது