பக்கம்:மூட்டம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قبائيyع / 80 பம்மியும், பயந்துபோயும் காணப்பட்ட நட்பு முகங்கள் தெரிந்தன. கூட்டம் சும்மாநின்றப்ோது, அTசின் அக்கா மகனால் அப்படி இருக்கமுடியவில்லை. 'இதுக்குப் பேர்தான் ஜகாத்தா கேவலம் கேவலம்! இப்பக்கூட சாராயக்கடைப் பாட்டு நிக்கல! சுகம் சுகமாம். பருவ சுகமாம்...' இப்போது முத்துக்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதுபோல் பேசினான். 'நீங்க அந்தப் பாட்டைத்தான் அசிங்கம் என்கிறீங்க, ஆனால் நான் அந்த சாராயக்கடையையே அசிங்கம் என்கிறேன். வாங்க அந்தக் கடையை அடிச்சு நொறுக்குவோம்.' முத்துக்குமார் அந்தக் கூட்டத்தைத் தாண்டி அதற்குப் பின்பக்கமாகப் போய் நின்றான். கூட்டத்தின் முகம் திரும்புவதற்காகக் காத்திருந்தான். இதற்குள் அமீரும் காதரும் கூட்டத்திலுள்ள நட்பு முகங்களை நெருங்கி அவர்களைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். முத்துக்குமாரும், வாங்க, ஒடி வாங்க என்று கூட்டத்திற்கு வழிகாட்டியாக ஓடினான். இரண்டு பெரிய வீடுகளுக்கு இடையே உள்ள இடுக்கு வழியாய் ஒடிய கூட்டம், அந்தச் சாராயக் கடை இருந்த வடமேற்குத் திசை நோக்கி போர்ப்பரணிக் குரலோடு ஒடியது. அமீர் வேகவேகமாய் ஒடி முத்துக்குமாரைப் பிடித்துக்கொண்டார். அவரிடமிருந்து முண்டியடித்தவனின் காதில் பலமாக ஒதி, அவனைப் பின்னுக்குப் பிடித்து இழுத்தார். சாராயக் கடைப்பக்கம் நடைபெறக்கூடிய கலாட்டாவில், தனது மதத்தைச் சேர்ந்த எவனாவது ஒரு வெறியன் அவனைத் தாக்கிவிடக்கூடாதே என்ற பயம். துரைச்சாமி முதலாளியால் தாங்க முடியாது. செத்தே போவார். இதற்கிடையே மசூதியிலிருந்து மேலத் தெருப்பக்கமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/82&oldid=882499" இலிருந்து மீள்விக்கப்பட்டது