பக்கம்:மூட்டம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 /فيشع சுெ.சமுத்திரம் ஒடிய இன்னொரு கூட்டம், அந்தத் தெருமுனைக்கு வந்து லேசாய் நிதானப்பட்டது. நான்கு வீடுகள் கட்டக்கூடிய பெரிய காலி மனையில் பாதி இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகை. இடையிடையே மூங்கில் தட்டிகள்; முகம்மது நர்சரிப்பள்ளி என்ற பெயர்ப்பலகை அளவுக்குக் கூட இல்லாத சின்னச் சின்ன அறைகள்; அதில் உள்ள இரண்டு அறைகள் ஒன்றாக்கப்பட்டு, இருபது இருபத்தைந்து தொழிலாளர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்க, எதிரே ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்த மீரானின் தோளில் கைபோட்டபடியே, முருகானந்தம் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டி ருந்தான். சராசரியைவிட அதிக உயரம், அந்த சராசரியை மெலிய வைக்கும் தேகம். ஆனாலும் மைக் தேவையில்லாத பெருங்குரல். 'ஏழைக்கு ஏழையே எதிரியாகக் கூடாது தோழர்களே! வியாபாரத்தனமான கேளிக்கைகளாலும், கொடுரமான மதவெறியாலும் முதலாளித்துவம் நம்மை அழிக்க வரும்போது நாம், பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கேடயமாகப் போட்டுக்கொண்டு, சமயச் சார்பின்மை என்ற கோட்பாட்டால், அவர்களைத் திருப்பி எதிர்கொள்ள வேண்டும் தோழர்களே! வகுப்புக்களை வர்க்கப்படுத்த வேண்டும் தோழர்களே! இப்போதைய பதட்டமான சூழ்நிலையில் நமது அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச சம்பளம் என்பது...' தெருமுனையில் நிதானித்த கூட்டத்தோடு கூட்டமாக நின்ற பீடி முதலாளி நூருல்லா கத்தினார். என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறிங்க. அயோத்தி மசூதியை இடிச்சுட்டாங் கன்னு நாம அலமோதுறோம். வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சுற மாதிரி பாட்டுப் போடுறான். இங்க என்னடான்னா, ஒரு இந்துப் பயல் துரோகி மீரான் பயல் துணையோட நம்ம பயல்களையே நமக்கு எதிராத் துண்டிவிடுறான். இன்னுமா உங்களுக்கு உணர்ச்சி வரலே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/83&oldid=882501" இலிருந்து மீள்விக்கப்பட்டது