பக்கம்:மூட்டம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் ان ساكسوع 821. கூட்டம் அப்படியும் உணர்ச்சியற்று நின்றபோது, அந்தக் கூட்டங்களில் ஆங்காங்கே விரவி நின்ற நூருல்லாவின் அடியாட்கள் பக்கத்தில் நின்றவர்களையும் தள்ளிக் கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். இதனால் ஆவேசப்பட்ட அந்தக் கூட்டம், அந்தக் கீத்துக் கொட்டகையை இழுத்துப் போட்டது. கடகட வென்று சாய்ந்த தட்டிகளில் உள்ள மூங்கில் கம்புகளை உருவிக் கொண்டது. முருகானந்தம் பேச்சை பாடங்கேட்பதுபோல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அங் கும் இங்குமாய் அலைமோதினார்கள். அவர்கள் தப்பிப்ப தற்கான வாசலைக் கூட்டம் கதவாய் அடைத்தது. மூங்கில் கம்புகளை சுழற்றியது. மீரான் தலையில் ஒரு குத்து. உடனே ரத்த ஊற்று முருகானந்தத்தின் வாயில் ஒரு முஷ்டிக் குத்து...அவன் மல்லாக்கத் தள்ளப்பட்டான். நாலைந்து பேர் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறைக்கு வெளியே கொண்டுவரப் போனபோது, மீரான் மெல்ல எழுந்தான். எழுந்த வேகத்திற்கு எதிர்வேகத்தில் கீழே தள்ளப்பட்டான். முருகானந்தத்தை மீட்கப் போன தொழிலாளர்கள் மூங்கில் கம்புகளின் சுழற்சிகளில் சிக்கி அங்கும் இங்குமாய் நெளிந்தார்கள். அதை...அந்த அடிதடியை ஆனந்தமாய் ரசித்துக் கொண்டு இருந்த நூருல்லா, ஆங் காங்கே சில அப்பாவித் தொழிலாளர்களைப் பார்த்துவிட்டு, ஆணையிட்டார். "பொறுக்கிப் பயலுவளா! எங்கிட்டயா வேலையைக் காட்டுறீங்க? சுகுமாரை விடுங்கடா மீரானை நொறுக்குங் கடா சண்முகத்தை அடிச்சது போதும்டா. பirரை ரெண்டு சாத்துச் சாத்துங்கடா, வில்லியத்தை விடுங்கடா, முருகானந்தத்துக்கு இது போதாது.டா.' கூட்டம், சகட்டுமேனிக்கு எல்லோரையும் தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் கீழே விழுந்தும், சுவரில் சாய்ந்தும் திக்கற்று செயலற்று நின்றபோது, அக்கம் பக்கத்துப் பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/84&oldid=882503" இலிருந்து மீள்விக்கப்பட்டது