பக்கம்:மூட்டம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் هسبتسرع / 83 வந்து ஒப்பாரி போட்டார்கள். அந்தப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மண் வெட்டியும் அரிவாளுமாய் ஓடிவந்தார்கள். நூருல்லாவுக்குப் பாதிப்பயம். அதோட மீரானை அடித்ததும் சரி; முரு கானந்தத்தை மிதிச்சதும் சரி; எல்லாரையும் சகட்டு மேனிக்கு அடித்துப் போட்டுட்டா அவங்க தேற ரெண்டு நாளாகுமே? அது வரைக்கும் பேக்டரி வேலையை யார் பார்க்குறது? நூருல்லா, தனது கூட்டத்தைக் கையமர்த்திவிட்டுக் கீழே கிடந்தவர்களைத் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்துவிட்டு இதம் போட்டுப் பேசினார். 'இவுங்களுக்கு தவுடு வச்சு ஒத்துங்கடா இனிமேலாவது ஒழுங்கா இருங்கடா யாருக்கிட்டே மோதறம்கிறது ஞாபகம் இருக்கட்டும்; நீங்க மோதுறது என்கிட்டே இல்லடா, இஸ்லாம் கிட்டிே. சரி சரி அவரவர் வீட்டுக்குப் போங்க! ஆனாலும் அந்தக் கூட்டம் வீட்டுக்குப் போகவில்லை. அந்தக் கட்டிடத்தின் முன் கொட்டிவைக்கப்பட்ட மணல் குவியல் மேலும், சல்லிக் குவியல் மீதும் ஏறி அவற்றைச் சிதற வைத்தபடியே எட்டிக் குதித்து, இரண்டு கால் பாய்ச்ச லில் சாராயக் கடையைப் பார்த்து ஓடியது. அந்த முப்பெரும் கூட்டமும், அந்த சாராயக் கடையை மூன்று பக்கமும் சூழ்ந்துகொண்டது. மாரியப்பன் இவ்வளவு சொல்லியும் பாட்டை நிறுத்தாத கடைப்பையன்களில் ஒருவனை அடிக்கக் கையை ஓங்கினான். மற்றவர்கள் அவனை மல்லாக்கத் தள்ள, அவன் கீழே விழுந்து, தள்ளாடி எழுந்தான். அந்தக் கூட்டத்திற்குப் பயங்கரமான கோபம். 'தாயத்து போட்ட இந்த வெத்திலைப்பயல், குடிச்சிட்டு வேணு மின்னே பாட்டுக்கேத்தபடியே ஆடுறான்.நம்மளைக் கிண்டல் பண்ணுறது மாதிரி ஆடிக் காட்டுறான். எவனை விட்டாலும் இவனை விடப்படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/85&oldid=882505" இலிருந்து மீள்விக்கப்பட்டது