பக்கம்:மூட்டம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاسلكيميع / 85 எடுத்துக் கூட்டத்தை நோக்கி எறிந்தபடியே எங்க பழனிவேல் ஐயாகிட்டே சொல்லி உங்களை என்ன செய்யப் போறோம் பாருங்கடா என்று கத்தியபடியே, நின்றதற்கு வட்டியும் முதலுமாக மீண்டும் ஓடினார்கள். கூட்டம் கொதித்துப் போனது. பதறியடித்து நின்ற பாத்திமாவைப் பார்த்தபடியே, நடந்ததை நம்ப முடியாமல் வாயில் ரத்த ஒழுகலோடும், தலையில் சிவப்பு எண்ணெ யோடும் பித்துப் பிடித்த நின்ற மாரியப்பன் மீது பாயப் போனது. ‘இவன் அவனுங்களோட சேக்காளி; இவனை அடிக்கறது அவங்களை அடிக்கிறது மாதிரி. ஒருத்தன், மாரியின் கையைப் பிடிக்கப் போனான். ன்னொருத்தன் தலையைத் தொட்டுவிட்டான். ரு மாரியப்பன் கீழே குனிந்துதலைக்கு மேல் நின்ற கையைத் தனது கையால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு ஓடினான். மரண மலையின் விளிம்பிலிருந்து வாழ்வுப்பள்ளத்தாக்கில் குதிப்பவன்போல் குதித்துக் குதித்து ஓடினான். குதிகால்கள் குதிரைக் கால்களாயின. கூட்டம் துரத்தியது. திரும்பிப் பார்த்த சாராயப் பயல்கள் அவன் தங்களிடம் வந்துதான் ஆகவேண்டும் என்பதுபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால எமதுரதனாய் காத்து நின்றார்கள். மாரியப்பன் திணறினான். திக்குமுக்காடினான். 7 குட்டிப் பிரசங்க மேடை மாதிரி மேக்கப் செய்யப்பட்ட அந்த ஆட்டோவிற்குள், காதர் பாட்சாவிற்காக காத்திருந்த முத்துக்குமார், டிரைவரின் முதுகு வழியாகக் கையைவிட்டு 'ஹாரன் அடித்தான். அப்படியும் காதர் வராததால் கீழே குதித்து அந்தஆட்டோவை வேடிக்கையாய்ப் பார்த்த சிறுவர், சிறுமியரையும், ஆங்காங்கே மூக்கில் விரல் வைத்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/87&oldid=882509" இலிருந்து மீள்விக்கப்பட்டது