பக்கம்:மூட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شكسبوع / 87 முத்துக்குமார், பழக்கப்பட்ட அந்த வீட்டுக்குள்படியேறிப் போனான். மூன்றாவது அறையில் காதர்பாட்சா சுவரில் பொருந்திய கண்ணாடியில் தலையை சரி செய்து கொண்டிருந் தான். கீழே அவன் அம்மா நசீமா மூலையில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். ஆயிஷா, பெரியம்மாவின் கண்ணிரை அவளது முந்தானையாலேயே துடைத்து விட்டு, அவளைத் தூக்கிப்பிடித்தது, யானைக் குட்டியை மான் குட்டி விளையாட்டாய் இழுப்பது போல் இருந்தது. முத்துக் குமாரைப் பார்த்ததும் ஆயிஷா, பெரியம்மாவை விட்டுவிட்டு ஒரு சோகப் புன்முறுவலோடு நிமிர்ந்தாள். நசீமாவோ அவனைப் பார்த்ததும் அழுதழுது ஒப்பித்தாள். 'நான் இவங்கிட்டே படிச்சுப் படிச்சுச் சொன்னேன். கேக்கலியேப்பா. மத்தவர்களை மாதிரி பழனிவேலுக்கு வாடகையைக் கூட்டி கொடுன்னு சொன்னேனே. பாவிப்பய பழனிவேலு பேன்சிக் கடையை தூள்தூளாக் கிட்டானாமே? ஆறாயிரம் ரூபாய் ரேக்கை வெளியிலே தூக்கிப் போட்டு மண்ணெண்ணெய்யை ஊத்தி எரிச்சானாமே? வாரவன் போறவன் எல்லாம கடையிலிருந்த பிளாஸ்டிக் தொட்டி, வளையலு, லெதர் பேக்கு, தூக்குப்பை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாமே. பாக்குறதுக்கு எல்லாம் சின்னப் பொருள் மாதிரி இருந்தாலும்,...பத்தாயிரம் ரூவாப்பா முத்துக்குமார் போட்ட சீட்டை ஏலத்திலே எடுத்து வைச்ச கடையாச்சே! எப்படி சீட்டுப் பணத்தைக் கட்டுறது? இவன் அத்தா இறந்துபத்து வருஷத்திலே இப்பத்தான் இவன் தலையெடுத்தான். அதுக்குள்ளே இவனைத் தலையெடுக் காமப் பண்ணிட்டாங்களே! அல்லா! எங்கள் ரப்பே நீதான். கேட்கணும்! அல்லா முத்துக்குமார்! நான் யாருகிட்டே சொல்லுவேன்?" 'அதான் அல்லாகிட்டே சொல்லிட்டியே என்று காதர்பாட்சா தலையில் இருந்த சீப்பை எடுக்காமல் கண்ணாடியை முறைத்த கண்களை விலக்காமல் சொன்னபோது, முத்துக்குமார் கீழே குனிந்த நமோவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/89&oldid=882514" இலிருந்து மீள்விக்கப்பட்டது