பக்கம்:மூட்டம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قاسمنتجين 994 ஆயிஷா பெரியம்மாவுக்கு சாதம் கொடுத்துட்டு எனக்கும் ஒரு கிளாஸ்மோர் கொண்டு வாங்க இவன் கிட்டே கத்திக் கத்தி தொண்டை வத்திப் போச்சு!" ஆயிஷா மீண்டும் முணுமுணுத்தாள். பேர் சொல்லிக் கூப்பிடத் தெரியுது. பிறகு எதுக்கு இங்க போடணும்? ஆனாலும் அவள் பெரியம்மாவைத் தூக்க முடியாமல் தூக்கி, சமையலறைக்கு நகர்த்திக் கொண்டு வந்தபோது காதரும் முத்துக்குமாரும் அடுத்த அறைக்குள் வந்தார்கள். காதர் நாற்காலியில் உட்காராமல் மேஜையில் உட்கார்ந்த போது முத்துக்குமார் கேட்டான். ஆயிஷாவை நான் இந்த வீட்டிலே பார்த்ததே இல்லை. ‘இவன் ஒருத்தன், இப்ப அது தான் முக்கியம்!" 'உங்க சித்தி வராமல், மகளை அனுப்பியிருக்காங்க ளேன்னு கேட்டேன். அக்கா ஏழையாயிருந்து தங்கச்சி பணக்காரியாய் இருந்தா சீனியாரிட்டி வயசுல நிக்காது. வசதியில்தான் நிக்கும். சித்தி என்ன சாதாரணமா? மெக்காவுக்கு பிளேன்லேயே போயிட்டு, பிளேன்லேயே வந்த ஹாஜி அஜீசோட பீவி யாச்சே எங்கம்மா எல்லாச் சொத்தையும் கீழத்தெரு ராஜலட்சுமிக்கு எழுதி வச்சுட்டு, கடைசியில மோதினாவா வேலை பார்த்த புகாரியோட சம்சாரமாச்சே! எங்கம்மாவுக்கு கால் ஒடிஞ்சாலும், இவங்க தான் அந்தக் காலை இழுத்து இழுத்து தங்கச்சி கிட்ட கால் ஒடிஞ்ச விவரத்தை, கதை மாதிரி சொல்லணும். இல்லைன்னா சித்திக்கு கோபம் வரும். ஆனா ஆயிஷா நல்ல பொண்ணு.' . 'நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுது காதர். 'உங்க பிரண்டு கண்ணுக்கு , நான் நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுதாம். கேட்டியா காக்கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/92&oldid=882523" இலிருந்து மீள்விக்கப்பட்டது