பக்கம்:மூட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் نستعyع / 91 முத்துக்குமார் பரவசப்பட்டான். தலை கூரையைத் துளைத்து மேலே போவது போலவும் ,கால்கள் தரையைத் துளைத்துக் கீழே போவது போலவும் ஒரு விஸ்வரூபக் கற்பனை. கண்கள் அவளுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள எதையும் பார்க்காமல் அவளை நேரடியாகப் பார்க்கும் அதிசயம். அடுக்கடுக்காய் எண்ணங்களைக் காட்டும் மனம். இப்போதுஅவளே எண்ணற்ற எண்ண அடுக்கானது மாதிரியானது ஏகாந்தம்! காதர்பாட்சா தான் அந்த மோனத்தைக் கலைத்தான். ‘ஏண்டா ஆயி கேட்குதுல்ல? பதிலுக்கு ஏதாவது பேசேன் 'உங்களை பொண்ணுன்னு அங்கீகரிச்சனே. அதுக்குச் சந்தோஷப்படுங்கன்னு நான் சொன்னா அவங்களுக்கு கோவம் வரும். எனக்கெதுக்கு வம்பு? 'மாதிரிப் பெண்ணுன்னு சொல்ல வந்தேன்னு சமாளி யேண்டா' ஆயிஷா உதட்டைக் கடித்தபடியே சிரித்தாள். முத்துக்குமார் சிரித்தபடியே உதட்டைக் கடித்தான். இருவரையும் மாறி மாறிப் பார்த்த காதர் எதையோபெரிதாய்க் கண்டு பிடித்துவிட்டு, அதை உலகுக்கு முதல் முதலாய் அறிவிக்கும் விஞ்ஞானி போலப் பேசினான். 'இப்போ நம்ம டவுனு பத்தி எரியுது! நம்ம மசூதிப் பாளையமும் பத்தி எரியப்போவுது சாராயக் கடை போனதை பழனிவேலு ஒரு கெளரவ பிரச்சனையா எடுக்காம இருக்கப் போறதில்லை. இதுவே இந்து முஸ்லீம் கலவரமா மாத்தப்பட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல. ஆனாலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி- ஒரே வழி இருக்கு. என்ன வழின்னு தான் கேளுங்களேன். 'சொல்லாட்டா உனக்குத்தான் தலைவெடிச்சுடுமே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/93&oldid=882524" இலிருந்து மீள்விக்கப்பட்டது