பக்கம்:மூட்டம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شائعام /92 'சரி வெடிக்கும் முன்னால சொல்லிடறேன். பழனிவேல் மகள் அபிராமிக்கும் திவான் முகம்மது மகன் சம்சுதீனுக்கும், அவங்க ஒருவரை ஒருவர் காதலிப்பதாலே அவங்களுக்கு போல்ஸ் காவலில் கல்யாணம் செய்து, இந்து ...முஸ்லீம்னு சொல்லிக்கிட்டித் திரியறவங்கள தலைகுனிய வைக்க லாம்னு நினைச்சேன். ஆனால் அந்தக் காதல் கிளிகள் இப்போ சண்டைக் கோழிகளாக மாறிட்டதுங்க. யாராவது ஒரு இந்துப் பயலும் ஒரு முஸ்லீம் பொண்ணும் காதலிச்சா சொல்லுடா. பப்ளிக்காகல்யாணம் செய்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக் காப்பாத்தலாம்.' காதர்பாட்சா, அந்த இருவரையும் நோட்டமிட்டான். அவர்களோ அதைக் கவனிக்கவில்லை. கவனிக்க நேரமு மில்லை. ஒருவர் மீது ஒருவர் நிலைநாட்டிய கண்கள் பின்வாங்க மறுத்தன. ஒன்றுக்கு ஒன்று இணையாய் புன்னகைத்த உதடுகள் ஒட்டிக் கொள்ள மறுத்தன. இதனால் காதர்பாட்சாதான் மீண்டும் கேட்டான். என்னடா சொல்றே?" 'உனக்கு விளையாடறதுக்கு நேரமில்லையாடா?" நான் சீரியசாத்தாண்டா சொல்றேன். யாராவது இருந்தால் சொல்லுடா. அவங்க எனக்கு சொந்தமாக இருந்தாக்கூட பரவாயில்லடா. இன்னைக்கே போலீஸ் பாதுகாப்பிலே தாலிகட்டி ஊர்வலமா வந்துட்டா, பல தாலிகளை நாம் காப்பாத்தலாம்.' சமையலறைக்குள் இருப்பதாக் எல்லோரும் நினைத்த நசீமா அங்கே கத்திக்கொண்டே ஓடிவந்தாள். . 'ஒங்களுக்கு மூளையிருக்குதா? முன்னப்பின்ன யோசிச்சிங்களா? அப்படியே கல்யாணம் நடத்தினால் முஸ்லீம் பெண்ணை இந்து கடத்திக்கிட்டு போனது மாதிரியும், இந்துப் பெண்ணை முஸ்லீம் கடத்திக்கிட்டு போனது மாதிரியும் கதை கட்டிவிட்டு, கடைசிலே குத்துப்பழி வெட்டுப்பழி வரும். நான் மகாத்மாகாந்தி இறந்தப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/94&oldid=882526" இலிருந்து மீள்விக்கப்பட்டது