பக்கம்:மூட்டம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شسستyع / 93 நடந்த கலவரத்தைக் கண்ணாலேயே பார்த்தவள். யாருக் காவது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுடுங்க." 'நீ வேற பெரியம்மா. காதர் அண்ணன் விளையாட்டுக்குச் சொல்றான்' விளையாட்டுத்தான் வினையாகும்...!" 'இல்ல ஆயி, நிசமாவே...' ஆயிஷாவும் முத்துக்குமாரும் தங்களுக்கு அப்போதே கல்யாணம் நடந்துவிட்டதுபோல் ஒருவரையொருவர் கண்களால் சல்லடையிட்டார்கள். ஏதாவது பேசினால் என்ன என்பது மாதிரி ஒவ்வொரு பல்லையும் ஊடுருவிப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள் அவர்கள். அப்படிப் பார்ப்பதைப் பார்த்த நசீமா பயந்து விட்டாள். ஆயிஷாவைக் கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டே அடுத்த அறைக்குள் ஒடினாள். ஏழெட்டுப்பேரைக் கொண்ட ஒரு கூட்டம் உள்ளே வந்தது. முருகானந்தம் தலையில் ஒரு கட்டு. அந்தக் கட்டு டிங்க்சர் அயோடினாலோ அல்லது ரத்தத்தாலோ ஒரு சதைக்கட்டி போலவே தோன்றியது. மீரான் கழுத்தில் பட்ட வெட்டுப் பள்ளத்தில் ஒரு களிம்பு கண்ணாடி மாதிரி பளிச்சிட்டது. ஒருத்தனுக்கு ஒரு விரல் வளைந்திருந்தது. இன்னொருத்தனுக்கு மேல் உதடு சிதைந்திருந்தது. அவர்களைப் பார்த்ததும் காதர் பாட்சா கத்தினான். 'மீரானுக்கு மூளை கிடையாதுங்கிறது உலகறிஞ்ச விஷயம். உனக்குமா முருகானந்தம்? வீடே பற்றி எரியிறபோது பீடிக்கு நெருப்பு கேட்ட மாதிரி. பாபர் மசூதி விவகாரத்திலே ஊரே கொதிச்சு நிக்கும்போது, நீ குறைந்தபட்ச சம்பளத்திற்கு கூட்டம் போட்டியாக்கும்? உனக்கு வேற நாள் கிடைக்கலையா? டாக்டர் கிட்ட காட்டினியா- செப்டிக் ஆகப்போகிறது...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/95&oldid=882528" இலிருந்து மீள்விக்கப்பட்டது