பக்கம்:மூட்டம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் - قبائيyع / 97 அப்போதே அறியாமையிலிருந்து நான் விடுபட்டு, ஒரு இந்துவாகி விட்டேன். செலவழித்த பணமான மூன்று லட்ச ரூபாய் போனால் போகட்டும் போடா என்று வேலையை நிறுத்தி விட்டேன். இப்படித் தான் ஒவ்வொரு இந்துவும் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முஸ்லீமின் மமதையும் அடங்கும். இமயமலையில் கடுந்தவம் செய்து நம் தவப்பயனாய் இங்கு வந்தருளியுள்ள சுவாமிஜி ஜெய் ராமானந்தா உங்களிடையே இப்போது பேசுவார்." ஜரிகை வேட்டியும், பட்டுச் சட்டையுமாய் கிழட்டுக் கல்யாண மாப்பிள்ளை மாதிரி வந்திருந்தார் பழனிவேல். அந்தக் கழுதை களவாணிப்பய காண்ட்ராக்டர் தலைவர் என்ற முறையில் தன்னைப் பேசக் கூப்பிடாதது அவருக்கு வருத்தந்தான். அதுவும் இருவகையில் நிம்மதி, சாதிக் கூட்டங்களில் ஆபாசமான வார்த்தைகளால் பேசிப் பழகியவர். இங்கே அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விடக்கூடாது. பழனிவேல், அவருடைய ஒரே சொல்லுக்காக வந்திருக் கும் உருண்டு திரண்ட அந்தக் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத் தின் முன் வரிசையில் உள்ள பெண்களில் தனியழகாய்த் தோன்றிய மகள் அபிராமியைப் பார்த்தார். நெற்றியில் நீளமான வெள்ளைக்கோடு. அதில் உருளையான சந்தனம். அதற்கு மேல் குங்குமம். அன்னை அபிராமியே அங்கே திரிசூலம் இல்லாமல் உட்கார்ந்திருப்பது போன்ற தோரணை. மகளைப் பெருமிதப்பட்டுப் பார்த்த அவர், பலத்த கைதட்டலுக்கு இடையே மைக் பக்கம் போன ஜெய் ராமானந்தாவைப் பார்த்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வந்து அடிக்கடி காசு கேட்ட மனிதன்-அதுவும் காலில் விழாத குறையாக, ஒரு தடவை இவர், 'உழைச்சு பிழையேன்யா' என்று கூடச் சொல்லிருக்கிறார். அப்புறம் ஆளைக் காணவில்லை. ஜெயிலுக்குப் போனானோ எங்கே போனானோ, இப்போது இமயமலையில் பிறந்து அங்கேயே ৫.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/99&oldid=882541" இலிருந்து மீள்விக்கப்பட்டது