பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

95 குணாதிசயங்கள் போர்களிலே தன் அஞ்சாத் தறுகண்மையைக் காட்டி வந்தவனாயினும், பகைவர்கள் வந்து பணிந்தபின், அவர்கள் இழைத்த சூழ்ச்சிகளையும், தீமைகளையும் முற்றும் மறந்து, அன்பும் மரியாதையும் அவர்களிடம் காட்டிவந்தவன். போர் அமலன்' என்று கம்பநாடர் இவனுக்குப் பேர் வழங்கியதும் இப் பெருங்குணத்தைக் கண்டென்றே சொல்லலாம். ஆகவே 'பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால், ஊராண்மை மற்றத னெக்கு என்றவாறு அமைந்த நம் வேந்தனது மறக் கருணைத்திறம் விளக்கமாகும். இவ்வாறு மறக்கருணையுடையனாயினும், பணியாத பகைவரிடம் இவன் சிறிதும் மனமிரங்கியவன் அல்லன், இவனது மதுராவிஜயத்தில் பாண்டியநாட்டைப் பாழ் படுத்தியும், பாண்டியன் அரண்மனையுட் புகுந்து, அங் குள்ள அவன் மண்டபங்களை இடித்துக் கழுதை ஏர் கொண்டு உழுது கவடிவித்தியும், பாணனுக்குப் பாண்டி யப்பட்டஞ் சூட்டியும் இவன் புரிந்த செயல்கள் கொடுமை யானவையே. ஆனால் தானும் தன் முன்னோனும் தக்க சமயங்களில் புரிந்த நன்றிகளையும், செய்த உடன் படிக்கைகளையும் பாண்டியன் மறந்து, தனக்குக் கேடு சூழ்வதை அறிந்ததும் உண்டான பெருஞ்சீற்றத்தின் விளைவே இச்செயல்கள். நம் சோழன் உள்ளொன்றும் புறம்பொன்றும் உடையவன் அல்லன். அளித்த வாக் குறுதியை உலகம் பிறழினும் வழுவாது செய்பவன். அதனாற்றான், இக்குணங்கள் தவறிய பகைவரிடம் இவன் தன் கொடுமையைக் காட்ட நேர்ந்தது என்னலாம். இப்படிப்பட்ட வன்கண்மைகளை இவன் முன்னோரும் பகைவர் திறத்தில் காட்டியவர்களாயிருத்தலும், அது புறத்துறைகளுள் ஒன்றாகப் புகழப்படுதலும் இங்கு அறியத்தக்கவை.